Page Loader
லியோ: விஜய், கவுதம் மேனன் மற்றும் படக்குழுவினருடன் இருக்கும் BTS படத்தை வெளியிட்டார் லோகேஷ் கனகராஜ்
லியோ குழுவினருடைய BTS படம் வெளியானது

லியோ: விஜய், கவுதம் மேனன் மற்றும் படக்குழுவினருடன் இருக்கும் BTS படத்தை வெளியிட்டார் லோகேஷ் கனகராஜ்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 11, 2023
10:31 am

செய்தி முன்னோட்டம்

'லியோ' படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். புகைப்படம் வெளியானது முதல், இணையத்தில் வைரலாக பரவியது. இதில், படத்தின் நாயகன் விஜய், கவுதம் மேனன், ஸ்டண்ட் இயக்குனர் அன்பறிவு, மாத்தியூ தாமஸ் மற்றும் சில படக்குழுவினர் ஆகியோருடன் லோகேஷ் கனகராஜ் குளிர் காய்வதை போல இருக்கிறது. #kashmir #Leo எனக்குறிப்பிடப்பட்டு அந்த பதிவு, ட்விட்டரில் வெளியானது. லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது, காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்னர், படப்பிடிப்பு தளத்திற்கு லியோ படக்குழுவினர், தனி விமானத்தில் செல்வது போன்ற வீடியோ ஒன்றை தயாரிப்பாளர் குழு வெளியிட்டது. இப்படத்தில், திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன் சர்ஜா மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

வைரலாகும் Leo BTS புகைப்படம்