Page Loader
ஜிகர்தண்டா-2 படத்தில் டீஸர் வெளியீடு:  எஸ்.ஜே.சூர்யாவும்  ராகவா லாரன்சும் இணைந்து நடிக்க உள்ளனர்.

ஜிகர்தண்டா-2 படத்தில் டீஸர் வெளியீடு: எஸ்.ஜே.சூர்யாவும் ராகவா லாரன்சும் இணைந்து நடிக்க உள்ளனர்.

எழுதியவர் Saranya Shankar
Dec 14, 2022
11:09 pm

செய்தி முன்னோட்டம்

டிசம்பர் 11-ம் தேதி கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவாக இருக்கும் ஜிகர்தண்டா-2 படத்தின் முதற்கட்ட படப்பூஜை மதுரையில் தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு எழுதி வெளிவந்த அதிரடி நகைச்சுவைத் திரைப்படம் ஜிகர்தண்டா. சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம், சிறந்த துணை நடிக்காக பாபி சிம்ஹாவிற்கும் , சிறந்த எடிட்டிங்கிற்காக விவேக் ஹர்ஷனுக்கும், என்ற இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்த 8 வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பூஜை மதுரையில் நடை பெற்றது..

ட்விட்டர் அஞ்சல்

ஜிகர்தண்டா-2 படத்தில் டீஸர் வெளியீடு

'ஜிகர்தண்டா' -2

'ஜிகர்தண்டா' இரண்டாம் பாகத்தில் இணைய இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவும் ராகவா லாரன்சும்

ஒரு சுவாரஸ்யமான திருப்பத்தில், ஜிகர்தண்டா தொடர்ச்சிக்காக ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கின்றனர். இப்படத்தின் கதாநாயகியாக தமிழில் முதல் அறிமுகமாக, மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடிக்க இருக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றன. இப்படத்தின் பெரும் படப்பிடிப்பு காட்சிகள் மதுரையில் எடுக்கப்படப் போவதாக, படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படம் 2014 வெளிவந்த ஜிகர்தண்டா படத்தின் தொடர்ச்சியா அல்லது இது முற்றிலும் புது கருக்களத்தை கொண்டுள்ளதா என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இதனை யடுத்து இப்படத்தின் டீஸர் நேற்று வெளியாகி, 1 மில்லியன் வியூக்களை கடந்துள்ளது.