Page Loader
கார்த்தி ரசிகர்களை மகிழ்விக்க, தீபாவளிக்கு வெளியாகிறது ஜப்பான்
பிறந்தநாள் விருந்தாக வெளியாகும் கார்த்தியின் ஜப்பான் பட அப்டேட்

கார்த்தி ரசிகர்களை மகிழ்விக்க, தீபாவளிக்கு வெளியாகிறது ஜப்பான்

எழுதியவர் Arul Jothe
May 25, 2023
09:37 am

செய்தி முன்னோட்டம்

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் இன்று. இயக்குனர் மணிரத்னம் இயக்கிய "பொன்னியின் செல்வன்" படத்தில் வந்தியதேவனாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். இதனையடுத்து தற்போது உருவாகி வரும் படம் 'ஜப்பான்', கார்த்திக்கு 25 வது படமாகும். இந்தப்படத்தின் அதிரடியான அப்டேட் அவரது பிறந்தநாளான இன்று வெளியாகியுள்ளது. படத்தின் கதாநாயகியாக அனு இமானுவேல் நடித்துள்ளார் & ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். மேலும், இந்தப்படத்தை குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி போன்ற படங்களின் இயக்குனர் ராஜு முருகன் இயக்கி வருகிறார். இப்படத்தில் 'ஜப்பான்' யார் என்பது குறித்த கதாபாத்திர அறிமுக வீடியோ இன்று காலை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்தாண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post