Page Loader
விஜய் சேதுபதியின் திரைப்படத்தில் கமிட்டான கங்கனா ரனாவத் 
விஜய் சேதுபதியின் திரைப்படத்தில் கமிட்டான கங்கனா ரணாவத்

விஜய் சேதுபதியின் திரைப்படத்தில் கமிட்டான கங்கனா ரனாவத் 

எழுதியவர் Nivetha P
Oct 28, 2023
06:45 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகிற்கு 'தாம் தூம்' என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கங்கனா ரனாவத். அதன் பின்னர் பாலிவுட் திரையுலகிற்கு சென்று வெற்றிபெற்ற இவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பின்னர் பி.வாசு இயக்கத்தில் சமீபத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து 'சந்திரமுகி 2' திரைப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். சமீபத்தில் சிறந்த நடிகைக்கான விருதினை இவர் 'கேங்க்ஸ்டர்' என்னும் திரைப்படத்தில் நடித்ததற்காக பெற்றார். இவர் பேசிய சில சர்ச்சையான கருத்துக்கள் காரணமாக எழுந்த எதிர்ப்பு காரணமாக இவருக்கு தற்போது ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி 

தொடர்ந்து 3 படங்களில் நடிக்கவுள்ளார் கங்கனா ரனாவத்

அண்மையில் டெல்லியில் நடந்த நவராத்திரி விழாவையொட்டி ராம்லீலா மைதானத்தில் ராவணன் உருவ பொம்மையினை அம்பு எய்தி எரித்தார் என்று செய்திகள் வெளியானது. கடந்த 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் பெண்மணி இவர் தான் என்னும் பெருமையினையும் பெற்றுள்ளார். இந்நிலையில், இவரது நடிப்பில் 'தேஜஸ்' என்னும் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து பேசிய கங்கனா ரனாவத், தனது அடுத்த படத்தினை விஜய் சேதுபதியுடன் இணைந்து திரில்லர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து 'தனு வெட்ஸ்' படத்தின் மூன்றாம் பாகத்திலும், 'நோட்டிபினோதினி' என்னும் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.