LOADING...
யார் ஹீரோ? 40 ஆண்டுகளுக்குப் பின் ஒரே திரையில் உலகநாயகனும் சூப்பர் ஸ்டாரும்! ப்ரோமோ வெளியானது

யார் ஹீரோ? 40 ஆண்டுகளுக்குப் பின் ஒரே திரையில் உலகநாயகனும் சூப்பர் ஸ்டாரும்! ப்ரோமோ வெளியானது

எழுதியவர் Sekar Chinnappan
Feb 21, 2026
01:33 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்ற செய்தி கடந்த சில மாதங்களாகவே கோலிவுட்டில் பேசுபொருளாக இருந்து வந்தது. இந்நிலையில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிப்பது உறுதியாகி உள்ளது. இதுகுறித்த ப்ரோமோவை படத்தயாரிப்பு நிறுவனம் ரெட் ஜெயன்ட்ஸ் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 1980களுக்குப் பிறகு இருவரும் தனித்தனிப் பாதையில் பயணித்து வந்த நிலையில், தற்போது ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement