Loading...
ரூ.634 கோடி நிதி முறைகேடு புகார்: தனக்கு தொடர்பில்லை என நடிகை ஜனனி அசோக்குமார் விளக்கம்
நிதி மோசடி புகாரில் தன் மீது பரப்பப்படும் அவதூறுகளுக்கு நடிகை ஜனனி அசோக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ரூ.634 கோடி நிதி முறைகேடு புகார்: தனக்கு தொடர்பில்லை என நடிகை ஜனனி அசோக்குமார் விளக்கம்

எழுதியவர் Vasuki
Oct 31, 2026
05:32 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ரூ.634 கோடி நிதி முறைகேடு விவகாரத்தில் தனது பெயரைத் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதூறு பிரச்சாரங்களுக்கு பிரபல சின்னத்திரை நடிகை ஜனனி அசோக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த மோசடி விவகாரத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ள அவர், உண்மைத்தன்மையை ஆராயாமல் செய்யப்படும் இத்தகைய அவதூறுகள் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறி விரிவான அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உண்மைக்கு புறம்பானவை

அரசியலுக்கு அப்பாற்பட்டவள்

சமீப நாட்களாக எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரூ.634 கோடி ஊழலுடன் தனது பெயரை இணைத்துப் பரப்பப்படும் பதிவுகளுக்குப் பதிலளித்த ஜனனி அசோக்குமார், "இந்த விவகாரத்தில் நான் எந்த வகையிலும் ஈடுபடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்டவள் (Apolitical). எந்தவொரு அரசியல் கட்சியுடனும் நான் இணைந்தது கிடையாது. அரசியல்வாதிகளுடன் எந்தவித தனிப்பட்ட நட்போ தொடர்போ வைத்துக்கொண்டதும் இல்லை.

என்னைப்பற்றி உலவும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானவை" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

சுயமரியாதை

பெண் சுதந்திரம் மற்றும் ஊடக தர்மம் குறித்த கேள்வி

தொடர்ந்து தனது அறிக்கையில் வேதனை தெரிவித்த அவர், "எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல், சம்பந்தப்பட்ட நபரிடம் விளக்கம் கூட கேட்காமல் இத்தகைய தீவிரமான குற்றச்சாட்டுகளைப் பரப்புவது எந்த வகையில் நியாயமாகும்?

ஒரு பெண்ணாக எனது சொந்த உழைப்பாலும் சுயமரியாதையுடனும் திரையுலகில் ஒரு நற்பெயரைக் கட்டமைத்து வாழும் நிலையில், இணையத்தில் உலவும் தவறான கதைகள் மூலம் ஒருவரின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகச் சிதைப்பது மிகுந்த மனவேதனையையும் சோர்வையும் அளிக்கிறது.

உண்மை நிலையை அறியாமல் ஒரு பெண்ணின் மீது சுலபமாகக் குற்றம் சுமத்தும் சமூகமாக இது மாறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஊடகங்களும் நெட்டிசன்களும் ஒரு குற்றச்சாட்டை நிரூபிக்கப்பட்ட உண்மையாகக் கருதாமல், உண்மைத்தன்மையை உறுதி செய்த பின்பே செய்திகளைப் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT