Loading...
ஒரு நாள் முன்னதாகவே வெளியாகும் 'ஜனநாயகன்'? தணிக்கை குழுவின் புதிய சான்றிதழ் மற்றும் ரன்டைம் விவரங்கள்
'ஜனநாயகன்' ஜூலை 23ஆம் தேதி வெளியாவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது

ஒரு நாள் முன்னதாகவே வெளியாகும் 'ஜனநாயகன்'? தணிக்கை குழுவின் புதிய சான்றிதழ் மற்றும் ரன்டைம் விவரங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 15, 2026
11:54 am

செய்தி முன்னோட்டம்

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திரையுலகிற்கு விடைதரும் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' உலகெங்கும் ஜூலை 23ஆம் தேதி (வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியாவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் ஜூலை 24 வெள்ளிக்கிழமை வெளியிட கோரிய போதிலும், உள்நாட்டு விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கூடுதல் வசூலை ஈட்டும் நோக்கில் படம் ஒரு நாள் முன்னதாகவே திரைக்கு வரவுள்ளது. இதனை இணைய செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ரன்டைம்

தணிக்கை குழுவின் புதிய சான்றிதழ் மற்றும் ரன்டைம்

மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) அண்மையில் இப்படத்திற்கு மறுதணிக்கை செய்து புதிய சான்றிதழை வழங்கியுள்ளது.

இதன்படி, படத்தின் புதிய ரன்டைம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் 52 வினாடிகள் (183.52 நிமிடங்கள்) என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

படத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 'ஏ' (A) சான்றிதழ் இதிலும் தொடர்கிறது.

இந்திய பதிப்பில் சில காட்சிகள் தணிக்கை செய்யப்பட்டிருந்தாலும், பிரிட்டனில் (UK) எவ்வித வெட்டுக்களும் இன்றி முழுமையான uncut பதிப்பு வெளியாகவுள்ளது.

ADVERTISEMENT

டைட்டில் கார்டு

'தளபதி' பட்டம் நீக்கமும் புதிய டைட்டில் கார்டும்

விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளதால், இனி அவர் 'தளபதி' என்று அழைக்கப்பட மாட்டார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக, இப்படத்தின் டைட்டில் கார்டில் 'மாண்புமிகு தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்' என்று குறிப்பிடப்படவுள்ளது.

இது அவரது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு தலைவரின் அரசியல் பயணம் மற்றும் அதிகார போராட்டங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

இதில் வில்லனாக பாபி தியோல் நடிக்க, பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தேர்தலுக்கு முன்பாக அரசியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற காரணத்தால் கடந்த ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய இப்படம் தணிக்கை குழுவின் தாமதத்திற்கு பின் தற்போது வெளியாகிறது.

ADVERTISEMENT