Loading...
சேலத்தில் ஜெயிலர் 2 முன்பதிவு நிறுத்தம்: ரெட் ஜெயன்ட் நிபந்தனைகளுக்கு மல்டிபிளக்ஸ் எதிர்ப்பு
சேலத்தில் ‘ஜெயிலர் 2’ முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் ஜெயிலர் 2 முன்பதிவு நிறுத்தம்: ரெட் ஜெயன்ட் நிபந்தனைகளுக்கு மல்டிபிளக்ஸ் எதிர்ப்பு

எழுதியவர் Vasuki
Oct 12, 2026
06:09 pm

செய்தி முன்னோட்டம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அக்டோபர் 15 அன்று வெளியாகவுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் முன்பதிவு தொடங்குவதில், சேலம் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் திடீர் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் டிக்கெட் முன்பதிவுகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், விநியோகஸ்தரான 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' நிறுவனத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தப் பங்கீட்டு முரண்பாடு காரணமாக சேலம் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் முன்பதிவைத் தொடங்காமல் நிறுத்தி வைத்துள்ளன. முன்னணி நட்சத்திரங்களுக்கு வழங்கப்படும் வழக்கமான அதிகபட்ச பங்கீட்டு வரம்பை விடவும் விநியோகஸ்தர் கூடுதலாகக் கோருவதே இந்த தாமதத்திற்குக் காரணம் எனத் திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பழைய முரண்பாடுகள்

சேலம் மல்டிபிளக்ஸ் வெளியிட்ட அறிக்கை

இது தொடர்பாக சேலம் மல்டிபிளக்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னணி திரைப்படங்களுக்கு வழங்கப்படும் நியாயமான ஒப்பந்தப் பங்கீட்டையே தாங்கள் வழங்க முன்வந்ததாகவும், விநியோகஸ்தர் தரப்பு அதைவிடக் கூடுதல் பங்கீட்டைக் கோருவதால் தற்போது முன்பதிவைத் தொடங்க இயலவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

சேலம் பகுதியில் திரையரங்குகளுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையிலான பங்கீட்டுப் பிரச்சனை தொடர்கதையாகி வருகிறது.

முன்னதாக இதேபோன்ற கருத்து வேறுபாட்டால் 'டிசி' திரைப்படம் இங்கு திரையிடப்படாமல் போனதும், 'ஜனநாயகன்' படத்திற்கு கடைசி நிமிடத்தில் உடன்பாடு எட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

டிக்கெட் முன்பதிவு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு - உடன்பாடு எட்டப்படுமா?

திரைப்படம் திரைக்கு வர இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவுக்காகக் காத்திருந்த சேலம் பகுதி ரஜினி ரசிகர்களுக்கு இந்தத் தகவல் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விநியோகஸ்தர் தரப்பு நியாயமான கோரிக்கையை ஏற்கும் பட்சத்தில் உடனடியாக முன்பதிவைத் தொடங்கத் தயாராக இருப்பதாகத் திரையரங்க நிர்வாகம் கூறியுள்ளது.

பண்டிகைக் கால வெளியீடாக வரும் இப்படத்திற்குப் பேச்சுவார்த்தை மூலம் விரைவில் தீர்வு காணப்பட்டு முன்பதிவு தொடங்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

ADVERTISEMENT

embed

Twitter Post

#Jailer2 #Salem Multiplex Booking delayed reason pic.twitter.com/vW49zbefCn— Tamil Cine Pulse (@TMManiac) October 12, 2026

ADVERTISEMENT