Loading...
பைதான் கோடிங் முதல் சாஃப்ட்வேர் கம்பெனி வரை அசத்தும் ரஜினியின் ரீல் பேரன்
12 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனரான ரஜினியின் பேரன் ரித்விக்

பைதான் கோடிங் முதல் சாஃப்ட்வேர் கம்பெனி வரை அசத்தும் ரஜினியின் ரீல் பேரன்

எழுதியவர் Vasuki
Oct 21, 2026
01:53 pm

செய்தி முன்னோட்டம்

ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேரனாக நடித்து தமிழக மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட குட்டி நட்சத்திரம் ரித்விக், வெறும் 12 வயதிலேயே சொந்தமாக ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியை வெற்றிகரமாக நடத்தி வருவதுடன், பைதான் கோடிங்கில் கைதேர்ந்தவராக விளங்கும் ஆச்சரியத் தகவல் வெளியாகியுள்ளது. யூடியூப் தளத்தில் ஆண், பெண் என விதவிதமான வேடமிட்டு கலக்கி வந்த இந்தச் சுட்டிப் பையனின் தொழில்முனைவோர் அவதாரம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர்

மிர்னா மேனன் பகிர்ந்த ரகசியம்

ஜெயிலர் 2 திரைப்படங்களில் ரித்விக்கிற்கு அம்மாவாக நடித்த நடிகை மிர்னா மேனன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், தனது ரீல் மகன் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தின் உரிமையாளர் என்ற தகவலை பகிர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து இணையதள ஊடகத்திற்கு பேட்டியளித்த ரித்விக், இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

தனது நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், "நாங்கள் மொத்தம் 5 பேர் இருக்கிறோம், பெயருக்கு ஒரு 5 பேர் இருக்கிறார்கள். நாங்கள் பைதான் கோடிங் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்" என மிக இயல்பாகக் கூறி பார்வையாளர்களை வியக்க வைத்துள்ளார்.

12 வயதில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் சூழலில், இந்த வயதிலேயே கோடிங் செய்து நிறுவனம் நடத்துவதைப் பார்த்துப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் ரித்விக்கை பாராட்டி வருகின்றனர்.

ரஜினியின் ரீல் பேரன்

அனிருத்தின்  தீவிர ரசிகன் ரித்விக்

திரையுலகில் அறிமுகமாகி 51 ஆண்டுகளைக் கடந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களில் தனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் முத்து என்றும், தான் முதன்முதலில் திரையில் பார்த்த ரஜினி படம் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 என்றும் ரித்விக் தெரிவித்துள்ளார்.

மேலும் இசையமைப்பாளர் அனிருத் என்றால் தனக்கு அலாதிப் பிரியம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், தனது இசைப் பட்டியல் முழுவதும் அனிருத்தின் பாடல்களே நிறைந்திருக்கும் என்றும், பலர் தன்னை 'குட்டி அனிருத்' என அழைப்பதாகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

நயன்தாராவின் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்து ஜெயிலர் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் நடித்துள்ள ரித்விக், தற்போது தனது பள்ளிப் படிப்பில் முழு கவனம் செலுத்துவதற்காக திரைப்படங்கள் எதிலும் ஒப்பந்தமாகாமல் படிப்பிற்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.

ADVERTISEMENT