Page Loader
 ஃபர்ஹானா படத்தின் சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் 
ஃபர்ஹானா படத்தின் சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

 ஃபர்ஹானா படத்தின் சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் 

எழுதியவர் Nivetha P
May 08, 2023
02:44 pm

செய்தி முன்னோட்டம்

மான்ஸ்டர், ஒரு நாள் கூத்து போன்ற தமிழ் திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்தவர் நெல்சன்வெங்கடேசன். இவர் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களை வைத்து 'ஃபர்ஹானா'என்னும் இஸ்லாமிய படத்தினை இயக்கியுள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் இஸ்லாமிய மதத்தைச்சேர்ந்த பெண்ணாக நடித்துள்ளார். இப்படம் வரும் மே 12ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் அண்மையில் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையினை எழுப்பியது. இதற்கிடையே இன்று(மே.,8) இப்படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்கள். அப்போது பேசிய இப்படத்தின் இயக்குநர், ஃபர்ஹானா படமானது இஸ்லாமிய மதத்திற்கு எதிரான படமோ அல்லது பிரச்சாரம் செய்யும் வகையிலோ எடுக்கப்பட்ட படம் அல்ல. இஸ்லாமிய நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கும் வகையிலேயே இப்படத்தினை நான் எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

படம்

'எனது சிறு வயது அனுபவங்களை வைத்தே இப்படம் எடுத்துள்ளேன்'-இயக்குனர் 

மேலும் பேசிய அவர், நான் சென்னை புதுப்பேட்டை பகுதியில் வளர்ந்தவன். அப்பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகளவில் காணப்படுவார்கள். எனது சிறு வயது அனுபவங்களை மையமாக வைத்தே இப்படத்தினை எடுத்துள்ளேன். இது மதம் சார்ந்த படமன்று. மாறாக மனம் சார்ந்தப்படைப்பு என்று தெளிவாக பேசியுள்ளார். தொடர்ந்து இதுகுறித்து பேட்டியளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த படத்தில் ஃபர்ஹானாவுக்கு 3 குழந்தைகள். கணவர் கதாபாத்திரத்தில் ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். அவங்கக்கூட வொர்க் செய்யும் கேரக்டரில் ஐஸ்வர்யா தத்தா, அனுமோல் நடித்திருக்கிறார். இப்படம் சீட் நுனியில் அமர்ந்துப்பார்க்கும் வகையில் திரில்லர் படமாக இருக்கும். இப்படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் எதுவுமில்லை. படம் பார்க்காமல் இப்படி பேசுறார்கள். படம் பார்த்தால்தான் புரியும். டீசரை வைத்து மட்டும் முடிவு செய்ய கூடாது என்று விளக்கமளித்துள்ளார்.