Page Loader
'அம்பேத்கர் அரசியல்' ஆயுதத்தை கையில் எடுக்கிறாரா விஜய்?
நடிகர் விஜய் அரசியலில் நுழைய திட்டமா?

'அம்பேத்கர் அரசியல்' ஆயுதத்தை கையில் எடுக்கிறாரா விஜய்?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 12, 2023
05:41 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய் நீண்ட காலமாக அரசியலில் நுழையப்போவதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன. உச்சகட்டமாக, சென்ற நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, அவரின் கட்சியின் பெயரை பதிவு செய்தார், விஜய்யின் தந்தையும், இயக்குனருமான S.A.சந்திரசேகர். அதன் பின்னர் பல திருப்புமுனைகள், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடைபெற்றது. எனினும் SAC மட்டும், விஜய் அரசியலுக்கு வருவார் என கூறி வந்தார். இந்நிலையில், வரும் ஏப்ரல் 14ஆம் தேதி, அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்தநாளில், அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என, தனது 'நண்பா நண்பி'களுக்கு, விஜய் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்ட செயலாளர்களுடன் கலந்துரையாட போவதாகவும் தெரிகிறது.

ட்விட்டர் அஞ்சல்

விஜய்யின் உத்தரவு