Page Loader
IMDb-ன் 2022 ஆண்டின் பிரபலமான இந்திய நட்சத்திரங்களில் தனுஷ் முதலிடத்தில் உள்ளார்
IMDb-ன் பிரபலமான இந்திய நட்சத்திரங்களில் தனுஷ் முதலிடம்

IMDb-ன் 2022 ஆண்டின் பிரபலமான இந்திய நட்சத்திரங்களில் தனுஷ் முதலிடத்தில் உள்ளார்

எழுதியவர் Saranya Shankar
Dec 08, 2022
06:36 pm

செய்தி முன்னோட்டம்

2022-ம் ஆண்டுக்கான பிரபல நட்சத்திரங்கள் பட்டியலை நேற்று 'IMDb' வெளியிட்டது. இதில் தனுஷ் பட்டியலின் முதல் இடத்தையும் அலியா பட், ஐஸ்வர்யா ராய், சமந்தா மற்றும் ரித்திக் ரோஷன் ஆகியோர் அடுத்தடுத்த நிலையில் உள்ளனர். 'IMDb' தன் அதிகாரப்பூர்வ அறிக்கை பட்டியலை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர். அதில் பட்டியலின் வரையறையும் விளக்கப்பட்டுள்ளது. திரையுல நட்சத்திரங்களின் வாராந்திர தரவரிசையை அடிப்படையாக கொண்டுள்ளதாக கூறியுள்ளது. 2022-ம் ஆண்டின் IMDb-ன் டாப் 10 மிகவும் பிரபலமான இந்திய நட்சத்திரங்கள் பட்டியலில் ஆண்டு முழுவதும், வாராந்திர தரவரிசையில் தொடர்ந்து முதல் இடங்களில் பல நட்சத்திரங்கள் இருந்தனர். IMDb தரவரிசை, உலக அளவில் 2000 லட்சத்திக்கும் அதிகமான பார்வையாளர்களின் எவ்வளவு முறை பார்த்துள்ளார்கள் என்ற காட்சிகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

IMDb-ன் பட்டியல்

2022-ம் ஆண்டின் IMDb-ன் முதல் 10 பிரபல நட்சத்திர பட்டியல்

டாப் 10 பட்டியலில் தனுஷ் முதலிடத்தை பெற்றுள்ளார். இவருடம் தனுஷின் ' தி க்ரே மேன்' தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், மற்றும் நானே வருவேன் போன்ற படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இடத்தை பெற்றுள்ள அலியா பட், கங்குபாய் காத்தியவாடி, RRR, ப்ரம்மாஸ்திரா மற்றும் டார்லிங்ஸ் ஆகிய படங்களில் நடித்து உள்ளார். ஐஸ்வர்யா ராய் பச்சன் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார். RRR படத்தில் நடித்த ராம் சரண் நான்காம் இடத்தை பெற்றுள்ளார். சமந்தா 5-வது இடத்தை பிடித்துள்ளார்.6-வது இடத்தில் ரித்திக் ரோஷனும், 7-வது இடத்தில் கியாரா அத்வானியும் உள்ளனர். 8,9 மற்றும் 10 இடங்களில் ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் மற்றும் யாஷ் இடம் பிடித்து உள்ளனர்.