ஹண்டர் வரார் சூடு கண்ணா; சன் நெக்ஸ்ட் எக்ஸ் பக்கத்தில் வெளியான வேட்டையன் படத்தின் சிறப்பு வீடியோ
அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்திற்கான புரமோஷன்களில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், கடந்த செப்டம்பர் 20 அன்று நடந்த வேட்டையன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் அனிருத், ஹண்டர் வரார் சூடு கண்ணா பாடலை அனிருத்தின் குழுவினர் பாடுவதையும், படத்தில் அந்த பாடலின் காட்சிகளையும் இணைத்து ஒரு வீடியோவாக சன் நெக்ஸ்ட் தளத்தின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல், ஆடியோ வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட மொத்த வீடியோவையும் சிறுசிறு பகுதிகளாக பிரித்து சன் நெக்ஸ்ட் எக்ஸ் பக்கத்தில் வரிசையாக வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கிடையே, ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளது குறிப்பிடத்துள்ளது.