LOADING...
பாக்ஸ் ஆபீஸில் இப்போதும் இவர்கள்தான் கிங்! விஜய்யின் கில்லி vs அஜித்தின் துணிவு ரீரிலீஸில் அதிக வசூல் யாருக்கு?
கில்லி மற்றும் துணிவு படங்களின் வசூல் வேட்டை

பாக்ஸ் ஆபீஸில் இப்போதும் இவர்கள்தான் கிங்! விஜய்யின் கில்லி vs அஜித்தின் துணிவு ரீரிலீஸில் அதிக வசூல் யாருக்கு?

எழுதியவர் Sekar Chinnappan
Feb 22, 2026
07:22 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவில் தற்போது புதிய படங்களுக்கு இணையாக, முன்னணி நடிகர்களின் பழைய பிளாக்பஸ்டர் படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் ரீரிலீஸ் கலாச்சாரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி கோலிவுட்டின் இரண்டு துருவங்களான விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் மீண்டும் மோதிக்கொண்டன. விஜயின் ஆல்-டைம் பேவரைட் படமான கில்லி மற்றும் அஜித்தின் அதிரடி ஆக்ஷன் படமான துணிவு ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் மீண்டும் வெளியாகின.

கில்லி

பாக்ஸ் ஆபீஸில் மீண்டும் மிரட்டும் கில்லி

நடிகர் விஜய் நடிப்பில் 2004 இல் வெளியான கில்லி, ஏற்கனவே 2024 ஆம் ஆண்டு ரீரிலீஸ் செய்யப்பட்டு பல கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் திரையிடப்பட்டுள்ள நிலையிலும், ரசிகர்களிடையே இதற்கான மிரட்டலான வரவேற்பு குறையவில்லை. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கில்லி திரைப்படம் உலகளவில் சுமார் ரூ.1.2 கோடி வசூல் செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. படத்தின் துடிப்பான திரைக்கதை மற்றும் தளபதி விஜயின் எனர்ஜியை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதே இந்த அதிரடி வசூலுக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

துணிவு

அஜித்தின் துணிவு படைத்த சாதனை

எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் வங்கி கொள்ளையை மையமாக வைத்து நடித்த துணிவு திரைப்படம், அஜித்தின் ஸ்டைலான நடிப்பு மற்றும் மாஸ் வசனங்களுக்காகப் பெயர் பெற்றது. ரீரிலீஸில் இந்தப் படம் இதுவரை சுமார் ரூ.50 லட்சம் வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. துணிவு படம் ஓடிடி தளங்களில் ஏற்கனவே பலமுறை பார்க்கப்பட்ட நிலையிலும், அஜித்தின் திரையரங்க அதிரடியை அனுபவிக்க ஏகே ரசிகர்கள் திரையரங்குகளுக்குப் படை எடுத்து வருகின்றனர்.

Advertisement

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம் மற்றும் எதிர்பார்ப்பு

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தங்களுக்குப் பிடித்தமான மாஸ் காட்சிகளைத் திரையில் மீண்டும் காண்பது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்துள்ளது. வரும் வார இறுதி நாட்களில் விடுமுறை என்பதால், இந்த இரண்டு படங்களின் வசூலும் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகள் மீண்டும் விஜய் - அஜித் ரசிகர்களின் கொண்டாட்டத்தால் களைகட்டியுள்ளன.

Advertisement