Page Loader
அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கப்போவது இவரைத்தான்! யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!
இதற்கான கதை விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன

அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கப்போவது இவரைத்தான்! யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

எழுதியவர் Venkatalakshmi V
Nov 11, 2024
04:10 pm

செய்தி முன்னோட்டம்

'ஜெயிலர் 2' படத்துக்குப் பிறகு, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இதற்கான கதை விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன என செய்திகள் வெளியாகியுள்ளன. 'ஜெயிலர் 2' படத்தின் திரைக்கதை வேலைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், தற்போது ஜூனியர் என்டிஆர் படத்துக்கான திரைக்கதை உருவாக்க பணிகள் நடைபெறுவதாக கூறப்படுப்படுகிறது. இது குறித்து சில மாதங்களுக்கு முன்பு, ஜூனியர் என்டிஆர் மற்றும் நெல்சன் ஒரு சந்திப்பில் கலந்துரையாடியுள்ளனர். அப்போது நெல்சன் தனது சில கதைகளை ஜூனியர் என்டிஆருக்கு முன்வைத்தார். அதில் ஒரு கதையை ஜூனியர் என்டிஆர் ஒப்புக்கொண்டு, அதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.

embed

Twitter Post

#JrNTR - Nelson Confirmed✅ After an ultra disastrous outing with #Beast, he has given a huge comeback with #Jailer which thrashed Joseph's #Leo. Now expectations are increasing day by day for superstar #Rajinikanth's #Jailer2. pic.twitter.com/y55Ib5pYpg— NTR FAN HYD (@RAVINAYAK28) November 11, 2024

பணிகள்

நெல்சனின் ஏனைய திட்டங்கள்

இயக்குநர் நெல்சன் சமீபத்தில் கவின் இயக்கத்தில் ப்ளடி பெக்கர் என்ற படத்தை தயாரித்திருந்தார். அப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனைத்தொடர்ந்து, ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தினை இயக்கவுள்ளார். தற்போது ரஜினி, லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். அதனைத்தொடர்ந்து அவர் நெல்சன் உடன் இணைவார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12-ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.