சிறைத்தண்டனைக்கு முறையீடு செய்ய உள்ளோம் - தன்னிலை விளக்கம் அளித்த லிங்குசாமி!
செய்தி முன்னோட்டம்
கோலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனரான லிங்குசாமி செக் மோசடி வழக்கில் 6 மாதம் சிறைத்தண்டனையை சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.
இந்த தண்டனை குறித்து லிங்குசாமி தற்போது தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அவர் அளித்த விளக்கத்தில், "பல ஊடகங்களில் பரபரப்பாக என்னை பற்றிய செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்கம் வேண்டியது என் கடமை.
இந்த வழக்கு பிவிபி கேப்பிட்டல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது.
அவர்கள் கொடுத்த, மேல்முறையீட்டில் நேற்று மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாங்கள் மாண்புமிகு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்" என குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JustIn | காசோலை மோசடி வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதாக இயக்குநர் லிங்குசாமி அறிக்கை!#SunNews | #Lingusamy pic.twitter.com/3UpEBii48m
— Sun News (@sunnewstamil) April 13, 2023