
இயக்குனர் மற்றும் ஹீரோவாக அவதாரம் எடுத்தார் பிரபல இயக்குனர் ஹரியின் மகன்
செய்தி முன்னோட்டம்
கோலிவுட்டின் பிரபல இயக்குனர் ஹரி மற்றும் நடிகை ப்ரீத்தாவின் மூத்த மகன் ஸ்ரீராம் தனது நண்பர்களுடன் இணைந்து ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார்.
அந்த குறும்படத்தில் அவரே நடிக்கவும் செய்துள்ளார்.
'ஹம்' என பெயர்கொண்ட அந்த குறும்படம் தற்போது யூட்யூபில் வெளியாகியுள்ளது.
இப்படத்தில், ப்ரீத்தா விஜயகுமாரின் சகோதரியும், ஸ்ரீராமின் சித்தியுமான நடிகை ஸ்ரீதேவியும் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு, சஞ்சய் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சாம் கார்மெலஸ் என்பவர் இசையமைத்து உள்ளார்.
அப்பாவை போல முழுநீள ஆக்ஷன் கமெர்ஷியல் படம் போலல்லாமல், திரில்லர் பாணியில் படத்தை எடுத்துள்ளார் ஸ்ரீராம்.
இனி தொடர்ந்து ஸ்ரீராம், கோலிவுட்டில் அடியெடுத்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
embed
இயக்குனர் ஹரியின் மகன் ஹீரோ!
'HUM' என்ற பைலட் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரியின் மகன் ஸ்ரீராம் ஹரி படத்தில் ஸ்ரீராம் ஹரியின் சித்தி ஸ்ரீதேவி விஜயகுமார் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்#hari #hum #sridevivijaykumar #PilotFilm #ThanthiTV pic.twitter.com/1aU1CZFkMY— Thanthi TV (@ThanthiTV) April 2, 2024