
ட்ரெண்டிங் வீடியோ: ஐந்து மில்லியன் வியூஸ்களை கடந்த 'தசரா' படத்தின் டீஸர்
செய்தி முன்னோட்டம்
தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் உருவாகி உள்ள 'தசரா' படத்தின் டீஸர், நேற்று வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே, பல மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது இந்த வீடியோ.
இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும், இந்த படத்தின் டீசரை, நேற்று நடிகர் தனுஷ் வெளியிட்டார்.
நானி சமீபத்தில் நடித்து வெளியான, 'அடடே சுந்தரா' படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது வெளியாகவுள்ள தசரா படத்தில், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசை, சந்தோஷ் நாராயண்.
பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய்குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படம், வரும் மார்ச் 30-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
'தசரா' படத்தின் டீஸர்
Here is the teaser of Dasara. My best wishes to the team. God bless. https://t.co/aN9ssKM1Xl ( Telugu ) https://t.co/UKbaFukm2a ( Tamil )
— Dhanush (@dhanushkraja) January 30, 2023