LOADING...
90 வயதில் கிராமி வென்ற தலாய் லாமா! ஆஸ்கார் நாயகன் ஸ்பீல்பெர்க் உடன் இணைந்து வரலாற்று சாதனை
திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தனது முதல் கிராமி விருதை கைப்பற்றினார்

90 வயதில் கிராமி வென்ற தலாய் லாமா! ஆஸ்கார் நாயகன் ஸ்பீல்பெர்க் உடன் இணைந்து வரலாற்று சாதனை

எழுதியவர் Venkatalakshmi V
Feb 02, 2026
11:31 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 68-வது கிராமி விருதுகள் வழங்கும் விழாவில், திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தனது முதல் கிராமி விருதை கைப்பற்றினார். 'Meditations: The Reflections of His Holiness the Dalai Lama' என்ற அவரது பேசும் புத்தக தொகுப்பிற்காக (Audio Book) இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த ஆடியோ புத்தகம், கதை சொல்லல் மற்றும் விவரிப்பு (Best Audio Book, Narration, and Storytelling Recording) என்ற பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டது. இப்போட்டியில் பிரபல நகைச்சுவை நடிகர் ட்ரெவர் நோவா மற்றும் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி கெட்டான்ஜி பிரவுன் ஜாக்சன் ஆகியோரை முந்தி தலாய் லாமா முதலிடம் பிடித்தார்.

கூட்டணி

இந்தியக் கலைஞர்களுடன் கூட்டணி

இந்த ஆல்பம் முழுக்க முழுக்க அமைதி, கருணை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இதில் இந்திய சரோட் இசை மேதை அம்ஜத் அலி கான் மற்றும் அவரது மகன்கள் அமான் அலி பங்காஷ், அயான் அலி பங்காஷ் ஆகியோரின் பாரம்பரிய இசை, தலாய் லாமாவின் ஆன்மீக உரைகளுடன் மிக அழகாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேசக் கலைஞர்களான ரூஃபஸ் வைன்ரைட், மேகி ரோஜர்ஸ் ஆகியோரும் இதில் பங்களித்துள்ளனர்.

பதில்

விருது குறித்து தலாய் லாமாவின் உருக்கமான பதில்

இந்த விருது குறித்துப் பேசிய தலாய் லாமா, "இதை ஒரு தனிப்பட்ட வெற்றியாக நான் கருதவில்லை. மாறாக, உலகெங்கும் வாழும் 800 கோடி மக்களின் நலனுக்கான அமைதி, கருணை மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஒரு கூட்டுப் பொறுப்பாகவே பார்க்கிறேன். இந்த அங்கீகாரம் எனது செய்தியை இன்னும் ஆழமாக உலகிற்கு எடுத்துச் செல்லும்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 90 வயதில் இந்த விருதை பெற்றதன் மூலம், மிக அதிக வயதில் கிராமி வென்றவர்களில் ஒருவராக அவர் மாறியுள்ளார். இதே விழாவில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கும் தனது முதல் கிராமி விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement