Page Loader
D51 திரைப்படத்தில் ரஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை
D51 என்ற திரைப்படத்திற்காக, தெலுங்கில் பிரபலமான இயக்குனர் சேகர் கமுலா என்ற பிரபல இயக்குனருடன் கை கோர்க்கவுள்ளார், தனுஷ்.

D51 திரைப்படத்தில் ரஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை

எழுதியவர் Venkatalakshmi V
Aug 04, 2023
05:27 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என பறந்து பறந்து நடித்து வரும் நடிகர் தனுஷ். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' என்ற திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக, D50 திரைப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் பலர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவரும் இந்த நேரத்தில், D51 என்ற திரைப்படத்திற்காக, தெலுங்கில் பிரபலமான இயக்குனர் சேகர் கமுலா என்ற பிரபல இயக்குனருடன் கை கோர்க்கவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்த படம் உருவாகவுள்ளது என கூறப்படுகிறது. அதோடு இந்த படத்திற்காக நாயகியாக நடிக்க ரஷ்மிகா மந்தனாவை நடிக்கவைக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது

ட்விட்டர் அஞ்சல்

D 51