NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / அஜித்தின் 'துணிவு' படத்தின் முதல் பாடல் 'சில்லா சில்லா' டிசம்பர் 9-ம் தேதி வெளியீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அஜித்தின் 'துணிவு' படத்தின் முதல் பாடல் 'சில்லா சில்லா' டிசம்பர் 9-ம் தேதி வெளியீடு
    அஜித்தின் 'துணிவு’ படத்தின் முதல் பாடல் 'சில்லா சில்லா' டிசம்பர் 9-ம் தேதி வெளியீடு

    அஜித்தின் 'துணிவு' படத்தின் முதல் பாடல் 'சில்லா சில்லா' டிசம்பர் 9-ம் தேதி வெளியீடு

    எழுதியவர் Saranya Shankar
    Dec 10, 2022
    10:57 pm

    செய்தி முன்னோட்டம்

    அஜித் குமாரின் அடுத்த படமான 'துணிவு' H.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில், மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திர கனி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாக உள்ளது.

    அஜித்தின் 61வது படமான துணிவு ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படமாகும்.

    இப்படத்தில் முதல் படலாக வெளியாக இருக்கும் 'சில்லா சில்லா' பாடல், வைசாக் அவர்களின் வரிகளில் பதிவிடப்படுகிறது. இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் பாடிய இப்பாடல் டிசம்பர் 9-ம் தேதி வெளியாக இருக்கிறது.

    நேர் கொண்ட பார்வை மற்றும் வலிமை தொடர்ந்து இப்படத்தின் இயக்குனர் மற்றும் அஜித் இணைந்து வெளிவரும் மூன்றாவது படமான 'துணிவு' வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

    ஜிப்ரான் இசையில் அஜித் நடிக்கும் முதல் படம் இது.

    மோதல்

    'துணிவு'டன் மோதும் 'வாரிசு'

    மிகவும் எதிர்பார்ப்புவுடன் ஜனவரி 11, 2023-ல் பொங்கலுக்கு வெளியாகும் 'துணிவு', தளபதி விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் 'வாரிசு' உடன் கடும் போட்டியில் களமிறங்க போகிறது.

    கோலிவுட்டின் மிக பெரிய இரு நட்சத்திரங்கள் 8 வருடத்திற்கு பிறகு முதல் முறையாக 'துணிவு' மற்றும் 'வாரிசு' படத்தின் மூலம் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இப்படத்தின் இயக்குனர் எச் வினோத், சமீபத்திய பேட்டியில், இதுபோன்ற மோதல்களை ஊக்குவிக்க வேண்டும், எனவே திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்கள் மற்றொன்றுக்கு எதிராக மோதுவதை அறிந்தால் அவர்கள் சிறந்த படங்களை எடுக்க ஊக்குவிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

    இப்படத்தின் தயாரிப்பிற்கு பிந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய

    சமீபத்திய

    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025