வெளியானது சந்திரமுகி- 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சந்திரமுகியாக கங்கனா ரனாவத்
2005-ம் ஆண்டு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் மற்றும் பி.வாசுவின் இயக்கத்தில் வெளியான ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படம் தான் சந்திரமுகி. இப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேல் மற்றும் பிரபு ஆகியோர் நடித்துள்ளனர். திகில் நிறைந்த இப்படத்தில் சந்திரமுகியாக ஜோதிகா நடித்துள்ளார். தன் அற்புதமான நடிப்பில் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைத்தார். இப்படம் படையப்பா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இந்நிலையில் தற்போது பி.வாசு அவர்கள் இயக்கத்தில் சந்திரமுகி- 2 படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் கதாநாயகனாக, நடிகர் மற்றும் நடன இயக்குனராக உள்ள ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார்.
சந்திரமுகி 2 படத்தில், ஜோதிகாவின் கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத்?
இப்படத்தில் ராகவா லாரன்ஸுடன் ராதிகா சரத்குமார், வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். எம்.எம். கீரவாணி மற்றும் ஆர்.டி.ராஜசேகர் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார். தயாரிப்பு வடிவமைப்பு தோட்டத்தரணி ஆவார். இதனிடையில் சந்திரமுகியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகமாக இருந்தத நிலையில், அனுஷ்கா ஷெட்டி மற்றும் த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் அது எதுவுமே அதிகாரப்பூர்வ தகவலாக இருந்தது இல்லை. இதனிடையில் தற்போது சந்திரமுகி 2 படத்தின் நாயகியாக பாலிவுட் நடிகை 'கங்கனா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக லைகா புரொடக்ஷன்ஸ், சந்திரமுகி-2 ஃபர்ஸ்ட் லுக் மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுள்ளது. பிரமாண்டமாக தயாரிப்பில் உருவாகும் இப்படம் 2023 ஆம் ஆண்டு உலகயெங்கும் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படும்.