பிக் பாஸ் தமிழ் சீசன் 9: இறுதிப்போட்டியாளர்கள், பரிசுத்தொகை மற்றும் வெற்றியாளர் குறித்த எதிர்பார்ப்புகள்
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவான 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9' அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சி, வரும் ஜனவரி 18, 2026 அன்று பிரம்மாண்டமான இறுதிப்போட்டியுடன் நிறைவடைகிறது. தற்போது நான்கு போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ள நிலையில், வெற்றியாளர் யார் என்பதை அறிய ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த சீசனின் இறுதி போட்டியாளர்களாக அரோரா, விக்கல்ஸ் விக்ரம், சபரிநாதன் மற்றும் திவ்யா கணேஷ் ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஒருவர்தான் இந்த சீசனின் வெற்றியாளராக மகுடம் சூடுவார்.
வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு நிலவரம் மற்றும் வெற்றியாளர் ஊகங்கள்
தற்போதைய இணையதள வாக்குப்பதிவு நிலவரப்படி, திவ்யா கணேஷ் மற்ற போட்டியாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. Filmibeat போன்ற தளங்களில் திவ்யா கணேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சபரிநாதன் இரண்டாம் இடத்திலும், அரோரா மற்றும் விக்ரம் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளதாகத் தெரிகிறது. இறுதிப்போட்டிக்கு முன்னதாக ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படலாம் என்றும் யூகங்கள் நிலவுகின்றன.
ஒளிபரப்பு
பரிசுத்தொகை மற்றும் ஒளிபரப்பு
ஜனவரி 18-ஆம் தேதி மாலை 6:00 மணி முதல் இந்த பிரம்மாண்ட இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, வெற்றியாளரை அறிவிப்பார். வெற்றியாளருக்கு ₹50 லட்சம் ரொக்கப் பரிசும், பிக் பாஸ் கோப்பையும் வழங்கப்படும். ரசிகர்கள் இந்த ஒளிபரப்பை அதிகாரப்பூர்வ Vijay TV தொலைக்காட்சி சேனலிலும், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் நேரலையாக காணலாம். ரசிகர்களின் ஆதரவு யாருக்கு என்பதைப் பொறுத்தே இந்த சீசனின் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார் என்பதால், இறுதி நிமிடம் வரை பரபரப்பிற்குப் பஞ்சமிருக்காது.