பிக் பாஸ் தமிழ் சீசன் 8 Day 17: ஸ்டார் ஹோட்டல் டாஸ்கில் பழிக்கு பழி வாங்கிய பெண்கள் அணி
செய்தி முன்னோட்டம்
பிக் பாஸ் வீட்டில், இரு தினங்களுக்கு முன்னர் வீக்லி டாஸ்காக ஹவுஸ்மேட்ஸிற்கு BB ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் தரப்பட்டது.
அதில் ஆண்கள் அணி, பெண்கள் அணி இருவரும் பிரிந்து, ஒரு அணி ஹோட்டல் நிர்வாகமாகவும், மற்றொரு அணி விருந்தினர்களாகவும் பங்குகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
விருந்தினர்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் அணியே வெற்றியாளராக கருதப்படும் எனவும் கூறப்பட்டது.
முதலில் பெண்கள் அணி ஹோட்டல் நிர்வாகத்தினராக களமிறங்க முடிவெடுத்தனர்.
2 நாட்கள் பெண்கள் அணியின் நிர்வாகம் நடைபெற்ற நிலையில், நேற்று ஆண்கள் அணியிடம் நிர்வாகம் மாற்றப்பட்டது.
ஆண்கள் நிர்வாகத்தில், முதலில் மானேஜராக முத்துக்குமரன், தலைமை சமையல் நிபுணராக தீபக் மற்றும் அவருடைய உதவியாளர்களாக ரஞ்சித் மற்றும் சாச்சனா இருப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ரிவெஞ்
பழிக்கு பழி வாங்கிய பெண்கள் அணி
பெண்கள் அணி, இந்த டாஸ்கின் மூலம் ஆண்கள் அணியை பழிவாங்க திட்டம் தீட்டியது.
அதில் வயதான பாட்டி மற்றும் பேரனாக அன்ஷிதா மற்றும் ஜெப்பிரி நடிக்க, நடிகை வேடத்தில் தர்ஷா குப்தாவும், அவருடைய அசிஸ்டன்ட் கதாபாத்திரத்தில் ஜாக்குலின் மற்றும் தர்ஷிகா இருப்பதாக முடிவெடுக்கப்பட்டது.
அதேபோல மாடலாக சௌந்தர்யாவும், சோசியல் மீடியா புகழ் மாமியாரும், அவருடைய மருமகள் வேடத்தினை முறையே ஆனந்தி மற்றும் பவித்ரா ஏற்றுக்கொண்டனர்.
இதில் பெண்கள் அணியின் முக்கிய குறிக்கோள், ஆண்கள் அணியை பழிக்கு பழி வாங்குவது என முடிவெடுக்கப்பட்டது.
அதனால், ஆண்கள் அணியை சுத்தலில் விட்டது பெண்கள் அணி. இது பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தது.
மோதல்
முட்டிக்கொண்டு ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யா
பெண்கள் அணி தங்கள் பங்கிற்கு நிகழ்ச்சியினை சுவாரஸ்யமாக கொண்டு சென்றபோது, கதாபத்திரங்களின் மூலம் ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யா மாறி மாறி உருவகேலி செய்துகொண்டனர்.
ஆரம்பத்தில் இதை வேடிக்கையாக எடுத்துக்கொண்ட ஜாக்குலின், ஒரு கட்டத்தில் சௌந்தர்யாவிடம், 'விளையாட்டாக இருந்தாலும், இனி அப்படி பேசாதே' எனக்கூறினார்.
அதற்கு சௌந்தர்யா, 'விளையாட்டை, விளையாட்டாக எடுத்து கொள்ள வேண்டும்..நீ அப்ப பேசினப்ப தெரியலையா இது Body Shaming அப்படினு' என எகிற, இடையே வந்த முத்துக்குமரன் இருவரையும் விலக்கி வைத்தார்.
அதை சௌந்தர்யா ஜெஃப்ரியிடம் புலம்புவதை கேட்க முடிந்தது.
அதன் தொடர்ச்சியாக மற்றொரு தருணத்தில், டாஸ்க் குறித்து ஜாக்குலின் எல்லோரையும் அழைக்கையில், சௌந்தர்யாவிடம், 'கொஞ்சம் அன்டன்டிவ்வா இருங்க' எனக்கூற, சௌந்தர்யாவிற்கு கோபம் தலைக்கேறி மல்லுக்கு சென்றார்.
டிப்ஸ்
ஆண்கள் அணி அதிகம் டிப்ஸ் பெற யுத்தி
இந்த சூழலில், பெண்கள் அணி குறைகளை போர்டில் எழுத, மேனேஜர் முத்துக்குமரன் மாற்றப்பட்டார். அந்த இடத்தில் VJ விஷால் பதவியேற்றார்.
அதன் பின்னர் ஆண்கள் அணி பெற்ற டிப்ஸ் எண்ணப்பட்டதில், பெண்கள் அணியை விட ரூ.150 மட்டும் குறைவாக இருந்ததை கண்டுகொண்ட ஆண்கள் அணி, அதை எப்படியும் பெற்றுவிட வேண்டும் என ஆடல்பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் பெண் வேடமிட்டு VJ விஷால் நடனமாட, பெண்கள் அணி அவரை சுற்றி வந்து டான்ஸ் ஆடினர். கூடவே டிப்ஸ்-உம் வழங்கப்பட்டது.
ஆண்கள் அணி, பெண்கள் அணியை விட கூடுதலாக பெற்றனரா, இந்த டாஸ்கில் வெற்றி பெற்றார்களா என்பது இனிதான் தெரியவரும்.
இன்று
இன்று என்ன நடக்கும்?
இந்த நிலையில் இன்றைய நிகழ்வின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் ஆண்கள் அணி, பெண்கள் அணி இருவரில் பெஸ்ட் மற்றும் ஒர்ஸ்ட் பெர்ஃபார்மர்ஸ் இரு அணிகளாக பிரிந்து இந்த BB ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்கை மேற்கொள்ளவிருக்கின்றனர்.
மோசமாக விளையாடுவார்கள் ஹோட்டல் நிர்வாகிகளாகவும், சிறப்பாக விளையாடியவர்கள் விருந்தினர்களாகவும் கலந்து கொள்ள போவதாக அறிவிக்கப்பட்டது.
அதில், தீபக், சத்யா, ஆனந்தி, அன்ஷிதா, சாச்சனா, ஜாக்குலின், VJ விஷால் மற்றும் ஜாக்குலின் ஹோட்டல் ஊழியர்களாக களம் இறங்குவது போல கட்டப்பட்டுள்ளது.
இதில் வெற்றி பெறவிருப்பது யார்? இன்று தெரியும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Day18 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 24, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/NnID31uFLy