பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 'டபுள் எவிக்ஷனில்' வெளியேறி இருக்கும் போட்டியாளர்கள்
பிக் பாஸ் - சீசன் 6 விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைவராலும் பெரிதும் பார்க்கப்படும் ஒரு ரியாலிட்டி தொலைக்காட்சி தொடராகும். இது கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு தமிழில் ஒளிபரப்பாகும் 6-வது சீசனாகும். இந்த நிகழ்ச்சி 9-ம் தேதி அக்டோபர் 2022 அன்று 'ஸ்டார் விஜய்', 'டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்' 24/7 மணி நேரலையில் தொடங்கப்பட்டது. முந்தைய சீன்களில் இல்லாமல் இந்த சீசனில் பொதுமக்களும் போட்டியாளர்களை பங்கேற்றுள்ளனர். 21 பேர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டி, 60 நாட்களுக்கு மேல் கடந்து வாராவாரம் ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு, 13 போட்டியாளர்கள் தற்போது பிக் பாஸ்-ல் தொடர்ந்து போட்டியிட்டு பிக் பாஸ்-க்குள் இருந்து வருகின்றனர்.
பிக் பாஸ்-ல் இருந்து இந்த வாரம் வெளியாக போகும் இரு போட்டியாளர்கள் யார் யார்?
கடந்த வாரம் பிக் பாஸில் இருந்து 'குயின்சி' வெளியான நிலையில் இந்த வாரம் ஆயிஷா, அசீம், ஜனனி கதிரவன், ஏடி.கே மற்றும் ராம் ஆகிய ஆறு போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர். கடந்த வாரமே 'டபுள் எவிக்ஷன்' இருக்கும் என கமல் அறிவித்து இருந்தார். இதனிடையில் இந்த வாரம் டபுள் எவிக்ஷனிலிருந்து வெளியாக இருக்கும் அந்த இருவர் யார் என்று மக்களிடையே கேள்வியெழுந்த நிலையில், பிக் பாஸ்-லிருந்து வெளியாக போகும் இருவர் 'ராம்' மற்றும் 'ஆயிஷா' என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் அறிவிக்கப் படாத நிலையில், ஆயிஷா' வெளியேற போவதாய் வெளியான தகவலினால் ஆயிஷாவின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.