சூப்பர் ஸ்டாரின் சிறந்த படங்கள் பற்றி பார்க்கலாம்
செய்தி முன்னோட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் மட்டுமின்றி, தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆகவும் இருந்துள்ளார். ஐம்பது வருட திரைப்பட வாழ்க்கையில், அவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 160 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து திரையுலகத்தில் ஜாம்பவானாக இருந்து வருகிறார்.
ஆறிலிருந்து அறுபது வரை, அதிசயபிறவி, முத்து, முள்ளும் மலரும், தளபதி, ராஜா சின்ன ரோஜா, ராஜாதி ராஜா, அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம், படையப்பா, சிவாஜி, எந்திரன், சந்திரமுகி, பேட்டை போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர்.
இவற்றில் பல, திரையரங்குகளில் ரசிகர்கள் விசில் பறக்க நூறு நாட்களுக்கும் மேல் பட்டையை கிளப்பிய படங்கள் ஆகும்.
பிறந்தநாள்
சூப்பர் ஸ்டாரை மாஸ் ஹீரோவாக மாற்றிய வில்லத்தனமான படங்கள்
பல்வேறு படங்களில் 'மாஸ் ஹீரோ' கெத்து காட்டிய நம் 'சூப்பர் ஸ்டார்' தன்னுடைய ஆரம்ப படங்களில் வில்லனாகவே அறிமுகம் ஆகியிருக்கிறார்.
'கெட்டப்பய சார் இந்த காளி' என்ற 16 வயதினிலே பட 'டியலக்' மூலமாகவே தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டு, வில்லன் கதாப்பாத்திரத்தையும் ரசிக்கும் படி ரசிகர்களை கவர்ந்தவர் நம் தலைவர்.
'அபூர்வ ராகங்கள்', 'மூன்று முடிச்சு', 'அவர்கள்', '16 வயதினிலே', 'ஆடுபுலி ஆட்டம்', 'பில்லா', 'நெற்றிக்கண்', 'எந்திரன்' போன்ற படங்களில் வில்லன்களையும் ரசிக்க வைத்து பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடிக்க வைத்தது.
இப்படி பல வருடங்களாக மாகா நடிகனாக உலாவரும் 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த' அவர்களுக்கு கோடானகோடி ரசிகர்கள் சார்பில் மனம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!