3 மணி நேரம் தான் - 2000-டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது
20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மறுவெளியீடு செய்ய இருக்கும் ரஜனி காந்தின் 'பாபா' படத்தின் முன்பதிவு 3மணி நேரத்தில் 2000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுக்களை விற்று தீர்த்துள்ளது. 2002-ம் ஆண்டு லோட்டஸ் இன்டர்நேஷனல் பேனரின் கீழ் சூப்பர்-ஸ்டார் ரஜனிகாந்த் எழுதி தயாரித்து மற்றும் நடித்து வெளியான படம் 'பாபா'. 'அண்ணாமலை', 'வீரா', 'பாட்ஷா' படங்களின் அடுத்தடுத்து வெற்றியை தொடர்ந்து சுரேஷ் கிருஷ்ணா ரஜினியுடன் இணைத்து இயக்கிய நான்காவது படம் இதுவாகும். இப்படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, விஜயகுமார், நம்பியார் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தற்போது மறுவெளியீடு செய்வதென அறிவித்திருந்த நிலையில் இப்படத்தின் டிரைலர்கள் அண்மையில் வெளியாகி 22-லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்க்கப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
பாபா' மறுவெளியீட்டின் முன்பதிவு விவரம்
20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாபா
இந்நிலையில் டிசம்பர் 12-ம் தேதி, ரஜனியின் பிறந்த நாள் அன்று 20 ஆண்டுகளுக்கு பிறகு 'பாபா' படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இந்த படம் புதிய தோற்றத்துடன் தமிழ் ரசிகர்களுகாக மீண்டும் தயாராகி உள்ளது. இப்படத்தில் வரும் பாடல்கள் மீண்டும் திரையிடலுக்கு ஏற்றாற் போல் ரீமிக்ஸ் செய்து டால்பி மிக்ஸில் மாற்றப்பட்த்துள்ளது. மேலும் தற்போதைய தொழில்நுடப்பத்திற்கு ஏற்றாற் போல ஒவ்வொரு பிரேமும் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு மேம்பட்ட வண்ண தரத்துடன் புதுப்பொலிவுடன் திரையிடப்படுகிறது. இதனால் இப்படத்தின் மறுவெளியீட்டுக்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது . இந்நிலையில் இப்படத்தின் மறுவெளியீட்டுக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் வெளியாகி இருந்தன. வெளியிடப்பட்ட சில நேரங்களிலேயே 2000 டிக்கெட்டுகளுக்கு மேலே விற்றுள்ள நிலையில் திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களும் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.