
ஏ. ஆர். ரகுமான் அடுத்த இசை நிகழ்ச்சிக்கான தகவல்கள் விரைவில் என அறிவித்துள்ளார்.
செய்தி முன்னோட்டம்
ஏ. ஆர். ரகுமானின் ட்விட்டர் பதிவு சமூக வலைதளத்தில் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய திரைப்பட இசை உலகில் ஒரு முக்கிய இடத்தை பிடித்தவர் இளம்புயல் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் ஆவார்.
தன் இளம்வயதில் இளையராஜாவிற்கு உதவியாளராக இருந்த ஏ. ஆர். ரகுமான் தனது தனித்து ஆளும் திறமையினால் 1991-ல் முதன் முதலில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த 'ரோஜா' படத்தின் மூலம் இசையமைப்பளார் ஆனார்.
இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பல மொழிகளில் இசை அமைத்ததோடு நில்லாமல் ஹாலிவுட்டிலும் தன் தடத்தை கால் பதித்தார். 'ஸ்லம் டாக் மில்லியனியர்' என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்காக இவர் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கி தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
இசை நிகழ்ச்சி
ஏ.ஆர்.ரஹ்மான் 2023-ன் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது?
திரைப்படங்களோடு நிறுத்தி கொள்ளாமல் விளம்பரம் , இசை நிகழ்ச்சி என அனைத்திலும் இசையினை ரசிகர்களுக்கு அல்ல தந்து வருகிறார்.
ஏ. ஆர். ரகுமான் 300க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் இசை நிகழ்ச்சிகளை (Concert) பலவற்றை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நடத்தியுள்ளார்.
ஒவ்வொரு முறையும் இந்தியாவிற்கு வெளியே ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடக்கும் போது, பல ரசிகர்கள் தங்கள் ஏமாற்றத்தை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி உள்ளனர்.
இதனிடையே ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் ஏ. ஆர். ரகுமானின் இன்றைய ட்விட்டர் பதிவு அமைந்து உள்ளது.
அவரின் ட்விட்டர் பக்கத்தில் "சென்னை இசைநிகழ்ச்சி 2023 .....40,000 இசை ஆர்வலர்கள் ..விரைவில் அறிவிப்பு! EPI #தமிழ்நாடு" என்று பதிவிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ஏ.ஆர்.ரஹ்மான் 2023-ன் இசை நிகழ்ச்சி பற்றிய பதிவு
Chennai Concert 2023 …..40,000 music lovers ..announcement coming soon! EPI #தமிழ்நாடு
— A.R.Rahman (@arrahman) December 7, 2022