Loading...
காதலரின் நச்சுத்தனமான அடக்குமுறை குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் பரபரப்பு பேட்டி
'டிராகன்' மற்றும் 'டில்லு ஸ்கொயர்' போன்ற ஹிட் படங்களில் நடித்தவர் பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன்

காதலரின் நச்சுத்தனமான அடக்குமுறை குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் பரபரப்பு பேட்டி

எழுதியவர் Venkatalakshmi V
Aug 13, 2026
09:49 am

செய்தி முன்னோட்டம்

'பிரேமம்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, சமீபத்தில் 'டிராகன்' மற்றும் 'டில்லு ஸ்கொயர்' போன்ற ஹிட் படங்களில் நடித்தவர் பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் சந்தித்த நச்சுத்தனமான (Narcissistic Abuse) காதல் உறவு மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தனியார் யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றில் அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மன உளைச்சல்

'நர்சிசிஸ்டிக் துன்புறுத்தல்' மற்றும் மன உளைச்சல்

தனியார் யூடியூப் நேர்காணலில் பேசிய அனுபமா, கடந்த இரண்டு ஆண்டுகள் தனக்குக் கடுமையான உடலளவிலான மற்றும் மனதளவிலான நரக வாழ்க்கையாக அமைந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

"இது உடனடி மாற்றமாக நடக்கவில்லை. மிகவும் மெதுவாக, எனது சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளாகத் தொடங்கியது. எனது உடல் எடைக் குறைந்து, மனதளவில் மிகவும் சுருங்கத் தொடங்கினேன். எனது குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்கள் நான் தனிமைப்படுத்தப்படுவதைக் கவனித்தனர்," என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

நிச்சயதார்த்த பேச்சுவார்த்தை

விரைவாக தொடங்கிய நிச்சயதார்த்த பேச்சுவார்த்தை

காதலிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே தனது முன்னாள் காதலர் தன்னை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தியதாகவும், வெறும் 3 மாதங்களுக்குள்ளேயே நிச்சயதார்த்தம் குறித்த பேச்சுகளைத் தொடங்கியதாகவும் அனுபமா கூறியுள்ளார்.

தான் பண ஆசை பிடித்தவர் என எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "அந்த நிச்சயதார்த்த முடிவை வேண்டாம் என்று மறுத்து தள்ளிப்போட்டதே நான்தான். ஒருவேளை நான் அதற்கு சம்மதித்திருந்தால், அந்தத் திருமணம் விவாகரத்தில்தான் முடிந்திருக்கும்" எனக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

ஒப்பீடு

'அந்நியன்' கதாபாத்திரத்துடன் ஒப்பீடு

தனது முன்னாள் காதலரின் குணமாற்றங்கள் குறித்துப் பேசிய அனுபமா, விக்ரம் நடித்த 'அந்நியன்' படக் கதாபாத்திரத்துடன் அவரை ஒப்பிட்டுப் பேசினார்.

"ஒரு நாள் அவர் 'ரெமோ' போல மிகவும் அன்பாக நடந்துகொள்வார். இவரை விடச் சிறந்த நபர் கிடைக்க முடியாது என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அடுத்த நாளே 'அந்நியன்' போல மிகவும் கொடூரமான குணத்துடன் நடந்துகொள்வார். ஒரு அந்நியனுடன் வாழ்வது போன்ற உணர்வே எனக்கு ஏற்பட்டது," எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

பாதிப்பு

திரையுலக வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு

இந்த நச்சுத்தனமான கட்டுப்பாடு தனது திரைப்பயணத்தையும் பாதித்ததாக கூறிய அனுபமா, "எனது வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றிப் படமான 'டிராகன்' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் நான் ஏன் கலந்து கொள்ளவில்லை? எனது வேலை முதல் தனிப்பட்ட வாழ்க்கை வரை அனைத்துக் காரியங்களையும் அவர் கட்டுப்படுத்தத் தொடங்கினார்," என வேதனை தெரிவித்துள்ளார்.

நடிகை மடோனா செபாஸ்டியன் நர்சிசிஸ்டிக் அப்யூஸ் குறித்துப் பேசிய இணையதள வீடியோவைப் பார்த்த பிறகே, தான் சந்தித்து வரும் பாதிப்பை பற்றி உணர்ந்து அதிலிருந்து மீளத் தொடங்கியதாக அனுபமா தெரிவித்தார்.

மேலும், இதுபோன்று பாதிக்கப்பட்ட பலரும் தங்களுக்கு நடப்பது என்னவென்று தெரியாமலேயே வாழ்ந்து வருவதாகவும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே தான் தற்போது மனம் திறந்து பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT