LOADING...
மீண்டும் இணைந்த ஜாம்பவான்கள்: 'கல்கி 2' படப்பிடிப்பு தளத்தில் கமல் - அமிதாப் நெகிழ்ச்சிச் சந்திப்பு
'கல்கி 2' படப்பிடிப்பு தளத்தில் கமல் - அமிதாப் நெகிழ்ச்சி சந்திப்பு

மீண்டும் இணைந்த ஜாம்பவான்கள்: 'கல்கி 2' படப்பிடிப்பு தளத்தில் கமல் - அமிதாப் நெகிழ்ச்சிச் சந்திப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 24, 2026
01:43 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தனது வீட்டின் முன் ரசிகர்களைச் சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்பு பணிகளுக்காக ஹைதராபாத் சென்றிருந்ததால், அவரால் ரசிகர்களை சந்திக்க இயலவில்லை. இது குறித்து தனது வலைப்பதிவில் பதிவிட்டுள்ள அவர், ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டதோடு, 'கல்கி 2898 AD' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.

சந்திப்பு

கமல் - அமிதாப் சந்திப்பு

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்த புகைப்படத்தை அமிதாப் பகிர்ந்துள்ளார். "நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் சிறந்த கலைஞர் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் இருவரும் இறுதியாக 'கிராஃபதார்' (Geraftaar) திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அஸ்வத்தாமாவாக தான் உருமாறும் சில BTS புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தகவல்கள்

திரைப்படம் குறித்த தகவல்கள்

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். முதல் பாகத்தில் சிறிய பாத்திரத்தில் வந்த கமல்ஹாசனுக்கு, இரண்டாம் பாகத்தில் மிக வலிமையான கதாபாத்திரம் இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக கர்ணா மற்றும் அஸ்வத்தாமாவின் கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் மோதல்களை மையமாக வைத்து இந்தப் பாகம் உருவாகிறது. உலகம் முழுவதும் 1,000 கோடிக்கும் மேல் வசூலித்த முதல் பாகத்தை தொடர்ந்து, இரண்டாம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பு விண்ணை தொட்டுள்ளது.

Advertisement