10 ஆண்டுகளுக்கு பின்னர் செல்வராகவனுக்கு பதிலளித்த த்ரிஷா - வைரலாகும் ட்வீட்
செய்தி முன்னோட்டம்
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு தெலுங்கில் எடுக்கப்பட்டு வெளியான திரைப்படம் 'ஆடவாரி மாடலக்கு அர்தாலே வேறுலே'.
இதில் வெங்கடேஷ், த்ரிஷா ஜோடியாக இணைந்து நடித்திருப்பர்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.
இதன் வெற்றியை தொடர்ந்தே தனுஷ், நயன்தாரா நடிப்பில் தமிழில் 'யாரடி நீ மோகினி' என்னும் தலைப்பில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.
தமிழிலும் இப்படம் சூப்பர் ஹிட்டானது.
இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படம் குறித்து ஒரு பதிவிட்டிருந்தார்.
2ம் பாகம்
2ம் பாகமாக எடுக்க வாய்ப்புள்ளதா என்னும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
அதில் அவர், "ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே திரைப்படத்தினை வெகுநாட்களுக்கு பிறகு மீண்டும் பார்த்தேன். வெங்கடேஷ், த்ரிஷா ஆகியோருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. ஆனால் இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், 10 ஆண்டுகள் கழித்து இந்த பதிவிற்கு நடிகை த்ரிஷா நேற்று(செப்.,10)ரீட்வீட் செய்து 'நான் ரெடி' என்று பதிலளித்துள்ளார்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து, இந்த த்ரிஷாவின் பதில், செல்வராகவன் 'ஆடவாரி மாடலக்கு அர்தாலே வேறுலே' படத்தின் 2ம் பாகத்தினை எடுக்க காரணமாக அமையுமா என்னும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.