LOADING...
தேர்தல் வாக்கு எண்ணிக்கைகு முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை திரிஷா வழிபாடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை திரிஷா வழிபாடு.

தேர்தல் வாக்கு எண்ணிக்கைகு முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை திரிஷா வழிபாடு

எழுதியவர் Vasuki
May 04, 2026
09:46 am

செய்தி முன்னோட்டம்

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான திரிஷா, இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இன்று காலை திருமலைக்கு வருகை தந்த அவர், ஏழுமலையானை நேரில் கண்டு வழிபட்டார். விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்ட அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் தீர்த்தப் பிரசாதங்கள் மற்றும் வேத ஆசி வழங்கப்பட்டது. திரிஷாவைக் காண ரசிகர்கள் அதிக அளவில் திரண்டதால், தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் பலத்த பாதுகாப்புடன் அவரை அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, கோவிலில் உள்ள ரங்கநாயகலு மண்டபத்தில் அவருக்கு வேத பண்டிதர்கள் மந்திரங்கள் ஓதி வேத ஆசி வழங்கினர்.

பாதுகாப்புடன் வெளியேற்றம்

குவிந்த ரசிகர்கள்

தரிசனம் முடிந்து திரிஷா வெளியில் வந்தபோது, ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர் கூட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) விஜிலென்ஸ் துறையினர் மற்றும் திரிஷாவின் தனிப்பட்ட பாதுகாவலர்கள் திரிஷாவைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, கூட்டத்திற்கு இடையே அவரைப் பத்திரமாக அழைத்துச் சென்றனர். இன்று தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் நடிகை திரிஷா திருப்பதிக்கு வருகை தந்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement