
மீண்டும் இணையும் 'ராட்சசன்' கூட்டணி: விஷ்ணு விஷால் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஷ்ணு விஷால், மூன்றாவது முறையாக டைரக்டர் ராம்குமாருடன் இணையவுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்க படுகிறது.
இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள, நடிகர் விஷ்ணு விஷால், 'ஹாட்ரிக் காம்போ' என்று இதை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தங்கள் கூட்டணி மீது நம்பிக்கை வைத்த சத்யஜோதி பிலிம்ஸ்சின் தயாரிப்பாளர் தியாகராஜனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
விஷ்ணு விஷால், ராம்குமாரின் இயக்கத்தில் இதற்கு முன்னர், முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இதில், ராட்சசன் திரைப்படம், பல பிராந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், விஷ்ணு விஷால், விரைவில் FIR 2 படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
ஹாட்ரிக் காம்போ
Mundasupatti
— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) January 20, 2023
Ratsasan
and now - #VV21
Semma excited for this one.. With the vision of @dir_ramkumar and backed by such a prestigious production house @SathyaJyothi..
This will be an unexplored viewing experience from us to you 💯 pic.twitter.com/NsSPESSHzQ