Loading...
23-வது நாளிலும் அரங்கு நிறைந்த காட்சிகள்: சூரி நடித்த மண்டாடி படத்தை பாராட்டிய சூர்யா
மண்டாடி படக்குழுவினரைப் பாராட்டிய சூர்யா

23-வது நாளிலும் அரங்கு நிறைந்த காட்சிகள்: சூரி நடித்த மண்டாடி படத்தை பாராட்டிய சூர்யா

எழுதியவர் Vasuki
Oct 04, 2026
05:24 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் மண்டாடி திரைப்படத்தின் 23-வது வெற்றிகரமான நாளில், படத்தின் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோருக்கு முன்னணி நடிகர் சூர்யா நெகிழ்ச்சியூட்டும் வாழ்த்துக் கடிதங்களை தனித்தனியாக அனுப்பியுள்ளார். ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் (RS Infotainment) சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் சத்யராஜ், சுஹாஸ், ரவீந்திரா, மஹினா, மிதுன் மற்றும் கீர்த்திகா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொலைநோக்குப் பார்வை

தயாரிப்பாளருக்குப் பாராட்டு

தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "மண்டாடி" படத்தின் கதை மீதும் அதன் உருவாக்கத்தின் மீதும் தயாரிப்பாளர் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையை நடிகர் சூர்யா வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இத்தகைய புதிய களம் கொண்ட அழுத்தமான திரைப்படத்தைத் தயாரிப்பதற்கு ஒரு தயாரிப்பாளருக்குத் தேவையான கலைசார்ந்த தொலைநோக்குப் பார்வையையும், அசாதாரண துணிச்சலையும் வெகுவாக மெச்சியுள்ளார்.

திரையரங்குகளில் கிடைத்துள்ள இந்த மகத்தான பாக்ஸ் ஆபீஸ் வெற்றி முழுக்க முழுக்கப் படக்குழுவினரின் கடின உழைப்பிற்குத் தகுதியானது என்று பாராட்டிய சூர்யா, எல்ரெட் குமார் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் படக்குழுவினருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை உரித்தாக்கியுள்ளார்.

விசில் பறந்த 23-வது நாள் காட்சி

இயக்குநருக்கு சூர்யா பாராட்டு

இயக்குநர் மதிமாறன் புகழேந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'மண்டாடி' திரைப்படம் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய மிகச் சிறந்த படைப்பாக மிளிர்வதாக சூர்யா புகழ்ந்துள்ளார்.

திரையரங்கிற்கு வந்து படத்தைப் பார்ப்பதில் எனக்குச் சற்று தாமதம் ஏற்பட்டாலும், 23-வது நாளில் ரசிகர்களின் விசில் சத்தம் மற்றும் தொடர் கைதட்டல்களுக்கு நடுவே திரையரங்கில் அமர்ந்து பார்த்த அனுபவம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் நேர்த்தியான எழுத்து வடிவம், இயக்கம் மற்றும் தொழில்நுட்ப நேர்த்தியைப் பாராட்டியுள்ள அவர், இயக்குநரின் இந்த மாபெரும் வெற்றி தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் ஓடும் வேளையில் சூர்யா அனுப்பியுள்ள இந்த வாழ்த்து மடல் படக்குழுவிற்கு உற்சாக டானிக்காக அமைந்துள்ளது.

ADVERTISEMENT