Page Loader
சந்திரமுகி 2 ரிலீஸ்: நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் நடிகர் ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள படத்தின் ஒரு காட்சி

சந்திரமுகி 2 ரிலீஸ்: நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் நடிகர் ராகவா லாரன்ஸ்

எழுதியவர் Srinath r
Sep 26, 2023
12:36 pm

செய்தி முன்னோட்டம்

சந்திரமுகி திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பி வாசு நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து இயக்கியுள்ளார். இப்படம் வரும் 28ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து நடிகர் ராகவா லாரன்ஸ் வாழ்த்து பெற்றுள்ளார். இந்த திரைப்படத்தை தொடங்கும் முன்னரும், ரஜினிகாந்திடம், ராகவா லாரன்ஸ் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன் என பெரும் நடிகர் பட்டாளமே நடித்துள்ள சந்திரமுகி-2 திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ரஜினிகாந்தை சந்தித்த ராகவா லாரன்ஸ்