ரசிகர்களின் சாக்லேட் பாய் என்றழைக்கப்படும் நடிகர் மாதவனின் பிறந்தநாள்!
மாதவனின் பிறந்தநாள் இன்று! 'அலைபாயுதே' படத்தில் தொடங்கிய மாதவனின் சினிமா பயணம் 23 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக தொடர்கிறது. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அதை வெகு சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறார். 'அன்பே சிவம்', 'ஆயுத எழுத்து' உள்ளிட்ட படங்களில் வெவ்வேறு கதாப்பாத்திரத்தில் நடிப்பை வெளிப்படுத்தினார். அதன் பின் அதிகம் படங்களில் நடிக்காமல் இருந்த மாதவன், 'இறுதி சுற்று' படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்து மாஸ் காட்டினார். 'விக்ரம் வேதா', 'மாறா' உள்ளிட்ட படங்களில் இமேஜ் பார்க்காமல் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து மக்களின் மனதில் ஒரு படி மேல் பதிந்தார். இறுதியாக 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' என்ற படத்தை அவரே எழுதி, இயக்கி வெளியிட்டு பாராட்டுகளை பெற்றார்.