NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படப்பிடிப்பு நிறைவு; புதிய உச்சம் தொட்ட ஓடிடி விற்பனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படப்பிடிப்பு நிறைவு; புதிய உச்சம் தொட்ட ஓடிடி விற்பனை
    நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படப்பிடிப்பு நிறைவு

    நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படப்பிடிப்பு நிறைவு; புதிய உச்சம் தொட்ட ஓடிடி விற்பனை

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 21, 2024
    05:39 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஆண்டு டிசம்பரில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் முதன்மை வேடத்தில் நடிக்கும் தக் லைஃப் படம் அறிவிக்கப்பட்டது.

    நாயகன் படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்துள்ள இரண்டாவது கூட்டணி என்பதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

    இத்திரைப்படம் ஒரு காவிய கால ஆக்‌ஷன் டிராமாவாக தயாராகி வருகிறது மற்றும் 2025 ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக கமல்ஹாசனுடன் சிம்பு, மணிரத்னம் மற்றும் சுஹாசினி இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த படத்தில் கமலுடன் த்ரிஷா, சிம்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    வைரலாகும் புகைப்படம்

    #ThugLife💥 pic.twitter.com/hXjRxTtDpG

    — Christopher Kanagaraj (@Chrissuccess) September 21, 2024

    ஓடிடி ஒப்பந்தம்

    தக் லைஃப் டிஜிட்டல் உரிமை ₹149.7 கோடிக்கு விற்பனை

    டெக்கான் ஹெரால்டின் கூற்றுப்படி, தக் லைஃப்பின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் ₹149.7 கோடிக்கு வாங்கியுள்ளது.

    இந்த ஒப்பந்தம் தமிழ் படத்திற்கு இதுவரை இல்லாத மிகப்பெரிய ஒப்பந்தம் என்று கூறப்படுகிறது.

    ₹100 கோடி சம்பாதித்த சூர்யாவின் கங்குவா மற்றும் ₹95 கோடியைப் பெற்ற அஜித்தின் குட் பேட் அக்லி போன்ற முந்தைய டிஜிட்டல் உரிமை ஒப்பந்தங்களை இது முறியடித்துள்ளது.

    விஜய்யின் சமீபத்திய வெற்றியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், ₹100 கோடி வசூலித்தது கூட, தக் லைஃப் உடன் ஒப்பிடும்போது குறைவான தொகையேயாகும்.

    இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ், ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகியவை இணைந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கமல்ஹாசன்
    இயக்குனர் மணிரத்னம்
    சினிமா
    திரைப்படம்

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    கமல்ஹாசன்

    தக் லைஃப் ஷூட்டிங்கில் இணைந்த சிம்பு: BTS புகைப்படங்கள் வெளியானது! சிலம்பரசன்
    இந்தியன் 2 படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு  ஷங்கர்
    Thug Life: மே 8 அன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு  சிலம்பரசன்
    முதல்முறையாக Thug Life படத்தில் கமலுடன் நடிக்கிறார் சிம்பு; வெளியானது இன்ட்ரோ வீடியோ சிலம்பரசன்

    இயக்குனர் மணிரத்னம்

    காதல், இயற்கை இரண்டையுமே சினிமாவில் புகுத்திய இயக்குனர் மணிரத்னத்தின் பிறந்தநாள்  தமிழ் திரைப்படம்
    இயக்குனர் மணிரத்னமிற்கு மேலும் ஒரு மணிமகுடம்! ஆஸ்கார் குழுவில் இடம்பெற்றார்  ஆஸ்கார் விருது
    சிங்கள இயக்குனரின் படத்தை வெளியிடும் மணிரத்தினம் தமிழ் திரைப்படம்
    KH234 படத்தில் முதல் முறையாக இணையும் திரிஷா, நயன்தாரா கமலஹாசன்

    சினிமா

    'குறி வச்சா இரை விழணும்'; வேட்டையன் பட டப்பிங் பணிகளை தொடங்கினார் நடிகர் ரஜினிகாந்த் ரஜினிகாந்த்
    #MeToo விவாகரத்தில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்; மோகன்லால் உறுதி மோகன்லால்
    கூலி படத்தில் நடிகர் சத்யராஜ்; போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சத்யராஜ்
    'மட்ட மட்ட ராஜ மட்ட எங்க வந்து யாருகிட்ட'; தி கோட் படத்தின் நான்காவது பாடல் வெளியானது நடிகர் விஜய்

    திரைப்படம்

    தி கோட் திரைப்படத்தில் அஜித்; வெங்கட் பிரபு வெளியிட்ட முக்கிய தகவல் நடிகர் விஜய்
    கூலி படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா; போஸ்டரை வெளியிட்டு உறுதி செய்தார் லோகேஷ் கனகராஜ் லோகேஷ் கனகராஜ்
    விசில் போடு ரீமிக்ஸ் தான் தி கோட் படத்தின் ஓபனிங் சாங்; பிரேம்ஜி அப்டேட் பிரேம்ஜி
    வாழை படத்தை பார்த்து மாரி செல்வராஜை பாராட்டிய மு.க ஸ்டாலின்; நன்றி தெரிவித்த இயக்குனர் மாரி செல்வராஜ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025