Page Loader
'ஜெயிலர்' படத்தில் ரஜினியின் மகனாக நடிக்கவிருந்த பிரபலம்; வெளியான சுவாரசிய தகவல் 
'ஜெயிலர்' படத்தில் ரஜினியின் மகனாக நடிக்கவிருந்த பிரபலம் குறித்த தகவல்

'ஜெயிலர்' படத்தில் ரஜினியின் மகனாக நடிக்கவிருந்த பிரபலம்; வெளியான சுவாரசிய தகவல் 

எழுதியவர் Nivetha P
Aug 17, 2023
06:31 pm

செய்தி முன்னோட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,நெல்சன் இயக்கத்தில் நடித்து வெளியான திரைப்படம் தான் 'ஜெயிலர்'. இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முத்துவேல் பாண்டியன் என்னும் 'ஜெயிலர்' கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் நடித்து அசத்தியுள்ளார். கடந்த 10ஆம் தேதி வெளியான இப்படம், ஒரே வாரத்தில் ரூ.400 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது என்று கூறப்படுகிறது. ரஜினியின் வழக்கமான ஸ்டைலுடன் கூடிய அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த இப்படத்திற்கு, அனிருத்தின் இசை மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

ஹிட் 

ரஜினியின் மகன் கதாபாத்திரத்தில் நடித்த வசந்த் ரவி

இப்படத்தின் மெகா ஹிட் காரணமாக இதில் நடித்துள்ள அனைவருமே மிகப்பெரிய பிரபலமாக மாறியுள்ளார்கள் என்றால் அது மிகையாகாது. அதன்படி, இப்படத்தில் ரஜினியின் மகன் கதாபாத்திரத்தில், வசந்த் ரவி நடித்திருப்பார். அவர் இதில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும், அவருக்கு இப்படம் நல்ல பெயரினை பெற்று கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது. இதனிடையே இப்படத்தில் ரஜினியின் மகனாக முதலில் நடிக்கவிருந்த பிரபலம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ரஜினிக்கு மகனாக, நடிகர் ஜெய் தான் இதில் நடிக்கவிருந்தாராம். ஆனால் ஒருசில காரணங்களால் அவர் இதில் நடிக்கவில்லை. அதன் பின்னரே, இந்த வாய்ப்பு வசந்த் ரவிக்கு சென்றுள்ளது. வசந்த் ரவி ஏற்கனவே 'தரமணி', 'அஸ்வின்ஸ்' போன்ற படங்களில் முன்னணி நடிகராக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.