2022-ல் அதிக ஃப்ளாப் படங்கள் கொடுத்தவர்; ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவுக்கு அசோக் செல்வனின் பதிலடி
தமிழ் திரை உலகில் வெளிவரும் படங்களை தன்னுடைய பாணியில் விமர்சனம் செய்பவர் ப்ளூ சட்டை மாறன். இவர் யூடியூப்-ல் பல படங்களை கேலியாக பேசி விமர்சனம் செய்பவர். இதனால் திரைப்படங்கள் வசூல் பாதிக்க படுகிறது என தயாரிப்பாளர்கள் புலம்பி வருகின்றன. ஆனால் இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்க தான் செய்கிறது. இவர் ஆன்டி- இந்தியன் என ஒரு எடுத்து அது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஆண்டு அதிக தோல்வி படங்களை தந்தவர் என அசோக் செல்வனை குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார். ப்ளூ சட்டை மாறனின் பதிவுக்கு பதிலடி தரும் விதமாக அசோக் செல்வன் ட்விட்டரில் தம் கருத்தினை பதிவிட்டுள்ளார்.
ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அசோக் செல்வனின் ட்விட்டர் பதிவு
அசோக் செல்வன் சூது கவ்வும் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி, பிட்ஸா- 2, தெகிடி என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வளரும் நடிகராக மாறியுள்ளார். இந்த வருடம் மட்டுமே இவர் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் என ஐந்து படங்களை வெளியாகின. இந்நிலையில் அதிக தோல்வி படங்களை கொடுத்த அசோக் செல்வன் என குறிப்பிட்டு ப்ளூ சட்டை மாறனின் பதிவு சமூக வலைத்தளங்களில் பேச்சு பொருளாய் பேசப்பட்டு வந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக அசோக் செல்வன் தன் ட்விட்டர் பக்கத்தில் "குரைக்கும் நாய்களை கண்டு கொள்ளாமல் முன்னோக்கி செல்வோம்" என பதிவிட்டு இருந்தார்.