
நடிகை பாவனாவிடம் மன்னிப்பு கோரினார் நடிகர் அஜித் - வைரல் வீடியோ
செய்தி முன்னோட்டம்
நடிகர் அஜித் தனது 62வது திரைப்படமான 'விடாமுயற்சி' படத்தில் மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவன தயாரிப்பில் நடித்து வருகிறார்.
அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் அஜித் மற்றும் த்ரிஷா கணவன் மனைவியாக நடிப்பதாகவும், வெளிநாட்டுக்கு இருவரும் சுற்றுலா செல்கையில் த்ரிஷா வில்லன்களிடம் சிக்கிக்கொள்ள அவரை அஜித் எவ்வாறு மீட்கிறார்?என்பதே இப்படத்தின் கரு என்று அண்மையில் செய்திகள் வெளியானது.
திட்டமிட்டபடி இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் பட்சத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் படம் வெளியாகக்கூடும் என்று தெரிகிறது.
படப்பிடிப்பு
இருவரும் ஏற்கனவே, 'அசல்' படத்தில் இணைந்து நடித்துள்ளனர்
இந்நிலையில், தற்போது அஜர்பைஜனில் மிக பிஸியாக படப்பிடிப்பில் இருக்கும் அஜித்தை நடிகை பாவனா நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது அஜித், நடிகை பாவனாவிடம், 'உங்களை சந்திக்க கொஞ்சம் லேட் ஆகிவிட்டது' என்று கூறி அஜித் மன்னிப்பு கேட்கிறார்.
அதற்கு பாவனா. 'நோ இட்ஸ் ஓகே. நீங்க லேட்டா வருவீங்கன்னு சொன்னதால் நானும் கொஞ்சம் லேட்டா தான் வந்தேன்' என்று பதிலளித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ரசிகர்கள் அஜித்தின் எளிமையை மீண்டும் இந்த வீடியோ பதிவை பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் ஏற்கனவே, 'அசல்' படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
வைரல் வீடியோ
#JUSTIN நடிகையிடம் sorry சொன்ன அஜித்! #Ajithkumar #Bhavana #Shootingspot #news18tamilnadu | https://t.co/uk2cvptM3n pic.twitter.com/z0fHjo5CEc
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 25, 2023