2022-ல் தோல்வியை சந்தித்த டாப் ஹீரோக்களின் தமிழ்ப் படங்கள்
செய்தி முன்னோட்டம்
கோலிவுட்டில் இந்த வருடம் மட்டும் 60க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின.
வெளியான அனைத்து படங்களும் வெற்றியைப் பெறவில்லை.
பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லாமல் அமைதியாக வந்த படங்கள் வெற்றியும் பெற்றன.
அதேபோல் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த டாப் ஹீரோக்களின் படங்கள் தோல்வியையும் சந்தித்தன.
அந்த வகையில் 2022-ல் வெளியாகி தோல்வியை சந்தித்த டாப் ஹீரோக்களின் படங்களை பின்வருமாறு பாப்போம்.
இந்த லிஸ்டில் முதல் இடத்தைப் பிடிக்கும் படம் கோப்ரா. நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான இந்த படத்தை, அஜய் ஞானமுத்து இயக்கினார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இப்படம் ரசிகர்களிடையே பெரியளவில் எதிர்ப்பார்க்கப்பட்டு தோல்வியை சந்தித்தது.
அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் வெளிவந்த ப்ரின்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்ப்பார்க்கப்பட்டு தோல்வியை சந்தித்தது.
தோல்வியை சந்தித்தப் படங்கள்
வேறு என்னென்ன படங்கள் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியை சந்தித்தன
அடுத்ததாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ஹே சினாமிகா.
அறிமுக இயக்குனரான பிருந்தா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் துல்கர் சல்மானுடன் அதிதி ராவ், காஜல் அகர்வால் நடித்துள்ளனர்.
இந்த படம் கலவையான விமர்சனைகளை பெற்று தோல்வியை சந்தித்தது.
இதனையடுத்து ஆர்யா நடித்து வெளிவந்த கேப்டன் படம் அதிக அளவு ரசிகர்களை கவராமல் தோல்வியை தழுவியது.
ஆர்யாவுடன் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சிம்ரன் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தினை சக்தி சௌந்தர் ராஜன் எழுதி இயக்கினார். இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.
அடுத்ததாக து.பா. சரவணன் எழுதி இயக்கி, விஷால் நடித்து வெளிவந்த படம் வீரமே வாகை சூடும்.
இப்படத்தில் விஷாலுடன் டிம்பிள் ஹயாத்தி, பாபுராஜ் ஆகியோர் நடித்துள்ள இந்த படமும் தோல்வியையே சந்தித்தது.