தமிழ்த் திரையுலகில் 20 வருடங்களாக ஆதிக்ககம் செலுத்தி வரும் த்ரிஷா
செய்தி முன்னோட்டம்
சமீபத்தில் பொன்னியின் செல்வன்- 1 பாகத்தில் சோழ இளவரசியாக நடித்த த்ரிஷா தமிழ்த் திரையுலகில் 20 வருடங்களை நிறைவு செய்துள்ளார்.
தென் இந்தியாவின் ராணி என அழைக்கப்படும் திரிஷா, முதன் முதலில் சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் ஒரு துணை நடிகையாக நடித்தார்.
2002-ல் அமீர் இயக்கத்தில் வெளிவந்த மௌனம் பேசியதே தான் இவர் கதாநாயகியாக நடித்து வெளிவந்த முதல் படமாகும்.
இதன் பிறகு சாமி, கில்லி, போன்ற பல வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் வர்ஷம் , நுவ்வொஸ்தானந்தே நேனோடண்டனா, மற்றும் அத்தாடு போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்து புகழின் உச்சிக்கு சென்றார்.
திரையுலக பயணம்
த்ரிஷாவின் 20 வருடக் கால திரையுலக பயணம்
2004 இல் வர்ஷம் படத்திற்காக அவர் தனது முதல் ஃபிலிம்பேர் விருதை சிறந்த தெலுங்கு நடிகைக்காக பெற்றார்.
நுவ்வோஸ்தானந்தே நேனோடந்தனா மற்றும் ஆடவரி மாதலகு அர்த்தலு வெருலே ஆகிய படங்களுக்காக மேலும் இரண்டு முறை விருதை வென்றார்.
அபியும் நானும், கீரிடம், விண்ணை தாண்டி வருவாயா, மங்காத்தா, என்னை அறிந்தால்,அரண்மனை-2, கொடி, பேட்ட, 96 போன்ற பல்வேறு வெற்றி படங்களில், கிட்டத்தட்ட அனைத்து கதாநாயகர்களுடனும் சேர்ந்து இவர் நடித்துள்ளார்.
2018-ல், 96 படத்திற்க்காக இவர் மீண்டும் ஃபிலிம்பேர் விருதைப் பெற்றார். பொன்னியின் செல்வன் - 2 மற்றும் சதுரங்க வேட்டை -2, ஆகியவற்றில் இவர் நடித்து வருகிறார்.