LOADING...
ஹிந்தி நடிகர் சல்மான் கான், 2 கோடி ருபாய் மதிப்புள்ள புல்லட் ஃப்ரூப் காரில் வலம்; விவரம் உள்ளே
2 கோடி ரூபாய் மதிப்புள்ள சல்மானின் அதிநவீன கார்

ஹிந்தி நடிகர் சல்மான் கான், 2 கோடி ருபாய் மதிப்புள்ள புல்லட் ஃப்ரூப் காரில் வலம்; விவரம் உள்ளே

எழுதியவர் Venkatalakshmi V
Apr 11, 2023
12:30 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் பிரபல நடிகர் சல்மான் கான். அவர் தற்போது அஜித் நடிப்பில் வெளியான 'வீரம்' படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்துவருகிறார். இந்த படத்தின் ட்ரைலர் விழாவிற்கு அவர் ஒரு பிரமாண்டமான புல்லட் ஃப்ரூப் காரில் வந்திறங்கினார். 50 வயதிலும், இளமை தோற்றத்துடன் இருக்கும் சல்மானை கண்டு வியக்காதவர்கள் கூட, அந்த காரை பார்த்து வாய் பிளந்தனர். காரணம், அந்த காரின் விலை 2 கோடி ரூபாய் ஆகும். தனது பிரத்யேக உபயோகத்திற்காக, துபாயிலிருந்து இந்த காரை இறக்குமதி செய்துள்ளார் சல்மான். சமீபத்தில், அவரது உயிருக்கு ஆபத்து என செய்திகள் வந்ததை அடுத்து, அவர் இந்த காரை பாதுகாப்பு நடவடிக்கைக்காக வாங்கியுள்ளார் என மும்பை செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

சல்மான் கானின் புல்லட் ஃப்ரூப் கார் 

ட்விட்டர் அஞ்சல்

சல்மானின் அதிநவீன கார்