LOADING...
பூக்களினால் அல்ர்ஜி, முயலிடம் கடி..சாகுந்தலம் படப்பிடிப்பில் நடைபெற்ற சில சுவாரஸ்ய தகவல்கள்
சமந்தா நடிப்பில் சாகுந்தலம் திரைப்படம் இந்த வாரம் வெளியாகவிருக்கிறது

பூக்களினால் அல்ர்ஜி, முயலிடம் கடி..சாகுந்தலம் படப்பிடிப்பில் நடைபெற்ற சில சுவாரஸ்ய தகவல்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 11, 2023
10:23 am

செய்தி முன்னோட்டம்

சமந்தா நடிக்கும் சரித்திர படமான சாகுந்தலம், இந்த வாரம் வெளியாகவிருக்கிறது. இதற்காக, சமந்தா பல ஊர்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அப்போது படப்பிடிப்பில் நடைபெற்ற சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். படப்பிடிப்பின் போது, சமந்தா தனது கைகள் மற்றும் கழுத்தில் பூக்களால் செய்யப்பட்ட ஆபரணங்களை அணிய வேண்டி இருந்ததாம். அதுவும் நாள் முழுவதும் அணிய வேண்டிய இருந்ததால், பூக்களினால் தனது சருமத்திற்கு அலர்ஜி ஏற்பட்டதாக கூறியுள்ளார். அதனால், கைகளில் பூக்கள் வடிவத்தில் பச்சை குத்தியது போல மாறிவிட்டதாம். எனினும் நாளடைவில் அது போய்விட்டதாக கூறினார். படப்பிடிப்புக்கு பயன்படுத்திய முயல் குட்டி, சமந்தாவை கடித்துவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Shaakunthalam

30 கிலோ எடைகொண்ட லெஹெங்கா அணிந்தார் சமந்தா

ஆடை வடிவமைப்பாளர் நீதா லுல்லா, சமந்தாவிற்கு உள்ள பூக்களின் அல்ர்ஜிக்கும் ஏற்றவாறு, ஆடைகளை வடிவமைத்து தந்தார். அதில், படக்காட்சிகளுக்காகவும், டான்ஸ்காகவும் தனி தனியாக ஆடைகள் வடிவைமைத்திருந்தாராம். சில உடைகள் மிக எளிமையாக இருந்ததாம், ஆனால், சில ஆடைகள் அதிக வேலைபாடுகளோடு, கிட்டத்தட்ட 30 கிலோ எடையில் இருந்ததாம். அந்த வெயிட்டான லெஹெங்காவை, சமந்தா ஒரு பாடல் காட்சியில் அணிய வேண்டி இருந்ததாம். நடன காட்சியில், ஒவ்வொரு முறையும், சமந்தா அந்த லெஹெங்காவின் எடையை தாங்க முடியாமல், ஃபிரேமை விட்டு வெளியே போய் விடுவாராம். நடன இயக்குனர், "ஒரு தடவையேனும் ஒழுங்காய் ஃபிரேம் உள்ளே நிற்கமாட்டாயா?" சமந்தாவை திட்டிவிட்டாராம். அப்போது தான் "லெஹெங்காவின் எடை, என்னையும் சேர்த்து இழுத்து போகிறது" என்று சமந்தா உணர்ந்தாராம்.