Loading...
RIL பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்! ஜியோ ஐபிஓவில் தனி ஒதுக்கீடு; Double Dip மூலம் பங்குகள் பெற வாய்ப்பு
ஜியோ ஐபிஓவில் RIL பங்குதாரர்களுக்குத் தனி ஒதுக்கீடு

RIL பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்! ஜியோ ஐபிஓவில் தனி ஒதுக்கீடு; Double Dip மூலம் பங்குகள் பெற வாய்ப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 15, 2026
03:15 pm

செய்தி முன்னோட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பிரம்மாண்ட பொதுப் பங்கு வெளியீட்டிற்கான (ஐபிஓ) எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) முதலீட்டாளர்களுக்கு புதிய செய்தி வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் வரைவு அறிக்கை (DRHP) விபரங்களின்படி, தற்போதைய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குதாரர்களுக்காக ஜியோ ஐபிஓவில் தனியாக பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை கௌரவிக்கவும், சில்லறை முதலீட்டாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் இந்தத் தனி வரிசை ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

தகுதி

தகுதி அளவுகோல் மற்றும் தகுதி நாள்

இந்த சிறப்புப் பங்கு ஒதுக்கீட்டில் தனிநபர் முதலீட்டாளர்கள் மற்றும் இந்து கூட்டு குடும்பப் பொதுப் பங்குதாரர்கள் (HUF) மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இதற்கான தகுதி நாள், ரெட் ஹெர்ரிங் பிராஸ்பெக்டஸ் (RHP) அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யப்படும் நாளாகும்.

அந்நாளில் யார் கணக்கில் RIL பங்குகள் உள்ளனவோ, அவர்களே இச்சலுகையை பெற தகுதியுடையவர்கள்.

ஐபிஓ அறிவிப்பு வந்த பிறகு அவசர அவசரமாக பங்குகளை வாங்குபவர்களைக் கட்டுப்படுத்தி, உண்மையான முதலீட்டாளர்களுக்குப் பலன் அளிக்கும் வகையில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இரட்டை விண்ணப்பம்

இரட்டை விண்ணப்ப வாய்ப்பு

பங்குதாரர்கள் ஒதுக்கீட்டின் கீழ் ஒரு தனிநபர் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை பங்கைக் கோரி விண்ணப்பிக்கலாம்.

இதன் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் என்னவென்றால், ஒரு முதலீட்டாளர் RIL பங்குதாரர் பிரிவில் விண்ணப்பிப்பதோடு, சில்லறை முதலீட்டாளர் அல்லது நிறுவனமல்லாதோர் பிரிவிலும் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முடியும்.

விதிமுறைகளின்படி இது இரட்டை விண்ணப்பமாக கருதப்பட்டு நிராகரிக்கப்படாது.

இதனால் அதிகப் போட்டி நிலவும் ஜியோ ஐபிஓவில் பங்குகள் கிடைக்கும் வாய்ப்பு இருமடங்காக அதிகரிக்கிறது.

ADVERTISEMENT

பங்கு ஒதுக்கீடு

எல்ஐசி பாணியிலான உத்தியும் பங்குகள் ஒதுக்கீட்டு விதிகளும்

பங்குதாரர்கள் பிரிவில் பங்குகள் முழுமையாகக் கோரப்படாவிட்டால், அவை முதலில் ஊழியர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு மாற்றப்படும்.

அதன்பின்னரும் பங்குகள் எஞ்சியிருந்தால், 70:30 என்ற விகிதத்தில் சில்லறை மற்றும் நிறுவனமல்லாதோர் பிரிவுக்குத் திருப்பி விடப்படும்.

கடந்த 2022 ஆம் ஆண்டு எல்ஐசி நிறுவனம் தனது பாலிசிதாரர்களுக்கு 10% ஒதுக்கீடு வழங்கி, தனது ஐபிஓவை 3 மடங்கு வெற்றிகரமாக சந்தா செய்ய வைத்தது.

அதே வெற்றிகரமான சந்தை உத்தியை தற்போது ரிலையன்ஸ் ஜியோவும் கையில் எடுத்துள்ளது.

ADVERTISEMENT