Loading...
செப்டம்பர் மாதத்தில் ரூ.32,490 கோடியைத் தொட்டு சாதனை படைத்த SIP முதலீடுகள்! முழு விபரம்
செப்டம்பர் மாதத்தில் ரூ.32,490 கோடியைத் தொட்டு SIP முதலீடுகள் சாதனை

செப்டம்பர் மாதத்தில் ரூ.32,490 கோடியைத் தொட்டு சாதனை படைத்த SIP முதலீடுகள்! முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 12, 2026
03:30 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய பரஸ்பர நிதித் துறை நிர்வகிக்கும் மொத்த சொத்துக்களின் மதிப்பு குறைந்தபோதிலும், முறைப்படியான முதலீட்டுத் திட்டங்கள் (SIP) வாயிலான மாதந்திர முதலீடு செப்டம்பர் 2026-ல் ரூ.32,490 கோடியை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்திய பரஸ்பர நிதிகளின் கூட்டமைப்பு (AMFI) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதப் பங்களிப்பான ரூ.32,297 கோடியிலிருந்து இது சுமார் ரூ.193 கோடி (0.6%) அதிகமாகும். கூடுதல் விபரங்கள் இங்கே:-

புதிய கணக்குகள்

63 லட்சம் புதிய கணக்குகள் மற்றும் SIP AUM நிலவரம்

செப்டம்பர் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 63 லட்சம் புதிய SIP கணக்குகள் முதலீட்டாளர்களால் தொடங்கப்பட்டுள்ளன.

இதன் விளைவாக, செப்டம்பர் மாத இறுதியில் SIP திட்டங்கள் மூலமாக நிர்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பு (SIP AUM) ரூ.17.86 லட்சம் கோடியாக நிலைகொண்டுள்ளது.

சந்தையின் ஏற்ற இறக்கங்களைக் கடந்து, சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் SIP முறையிலான மாதாந்திர சேமிப்புப் பழக்கம் தொடர்ந்து வலுவடைந்து வருவதை இந்தத் தரவுகள் தெளிவாக உணர்த்துகின்றன.

மொத்த மதிப்பு சரிவு

சரிவை சந்தித்த மொத்த பரஸ்பர நிதி சொத்து மதிப்பு

ஒருபுறம் SIP முதலீடுகள் உச்சத்தைத் தொட்டாலும், பரஸ்பர நிதித் துறையின் மொத்த நிகர சொத்து மதிப்பு (Total Industry AUM) செப்டம்பரில் சரிவை சந்தித்துள்ளது.

ஆகஸ்ட் இறுதியில் ரூ.87.08 லட்சம் கோடியாக இருந்த மொத்த AUM, செப்டம்பர் 30 நிலவரப்படி 5.1 சதவீதம் சரிந்து ரூ.82.64 லட்சம் கோடியாகக் குறைந்தது.

கடன் சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களிலிருந்து ஒரே மாதத்தில் ரூ.1.83 லட்சம் கோடி நிதி வெளியேறியதே இந்த ஒட்டுமொத்த சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.

ADVERTISEMENT

முதலீடுகள்

ஈக்விட்டி ஃபண்டுகளில் குவியும் முதலீடுகள்

கடன் நிதிகளில் சரிவு ஏற்பட்ட போதிலும், பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுகள் செப்டம்பரில் ரூ.38,306.55 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளன.

இது ஆகஸ்ட் மாதத்தை விட 31 சதவீதம் அதிகமாகும்.

ஈக்விட்டி பிரிவில் குறிப்பாக ஸ்மால்-கேப் ஃபண்டுகள் ரூ.9,038.57 கோடியையும், மிட்-கேப் ஃபண்டுகள் ரூ.7,834.84 கோடியையும், பிளெக்ஸி-கேப் ஃபண்டுகள் ரூ.6,701.80 கோடியையும் ஈர்த்துள்ளன.

சந்தை மதிப்பில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், முதலீட்டாளர்களின் நீண்டகால SIP முதலீட்டுப் பயணம் தொடர்வதை இது காட்டுகிறது.

ADVERTISEMENT