இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்: டெண்டர் கோருபவர்களுக்கு RBI-இன் நிபந்தனைகள் என்ன?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக பல ஆண்டுகள் ஆயுள் கொண்ட பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் ரிசர்வ் வங்கியின்(RBI) திட்டம் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான 'பாரதிய ரிசர்வ் வங்கி நோட் மூத்ரன் பிரைவேட் லிமிடெட்' (BRBNMPL) வெளியிட்ட சர்வதேச விருப்ப வெளிப்பாட்டிற்கு (EOI) இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. CCL Secure, Cosmo First போன்ற முன்னணி இந்திய பாலிமர் நிறுவனங்கள் மற்றும் இங்கிலாந்தின் புகழ்பெற்ற De La Rue நிறுவனத்துடன் இணைந்த இந்திய நிறுவனங்கள் ஆகியவை இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளன. தேசியப் பாதுகாப்பு மற்றும் நாணயப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி பல புதிய கட்டுப்பாடுகளைக் விதித்துள்ளது.
கட்டுப்பாடுகள்
சீனா, பாகிஸ்தானுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள்
ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள் பாலிமர் ரூபாய் நோட்டுத் தாள்கள் தயாரிப்பதில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
முதற்கட்டமாகச் சுமார் 68,000 ரீம்கள் பாலிமர் சப்ஸ்ட்ரேட் தாள்களை விநியோகிக்கக் கூடிய உள்கட்டமைப்பு இருக்க வேண்டும்.
கள்ள நோட்டுகளை முற்றிலும் தடுக்கும் வகையில் 'Opacified Polymer Substrate' தாள்களில் அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும்.
ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள், சீனா அல்லது பாகிஸ்தானில் தங்களுக்கு இருக்கும் வணிகச் செயல்பாடுகளில் இருந்து இந்தியாவிற்கான விநியோக முறையை முற்றிலும் தனிமைப்படுத்த வேண்டும்.
புதிய பாலிமர் தாள்கள் தயாரிப்பில் விலங்கு கொழுப்புகள் அல்லது விலங்கு சார்ந்த பொருட்கள் பயன்படுத்தப்படக் கூடாது என்ற கண்டிப்பான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.