Page Loader
பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் MD, CEO சுரிந்தர் சாவ்லா ராஜினாமா 

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் MD, CEO சுரிந்தர் சாவ்லா ராஜினாமா 

எழுதியவர் Sindhuja SM
Apr 09, 2024
06:45 pm

செய்தி முன்னோட்டம்

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த சுரிந்தர் சாவ்லா "தனிப்பட்ட காரணங்களுக்காக" ராஜினாமா செய்ததாக இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. சாவ்லாவை தொடர்ந்து யார் தலைமைச் செயல் அதிகாரியாக பதவியேற்பார் என்பது குறித்த எந்த தகவலையும் வெளியிடபடவில்லை. அவரது ராஜினாமா ஜூன் 26ஆம் தேதி அமலுக்கு வரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. " பிபிபிஎல் இன் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுரிந்தர் சாவ்லா, தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சிறந்த தொழில் வாய்ப்புகளை ஆராய்வதற்காகவும் ஏப்ரல் 8, 2024 அன்று தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்துள்ளார். ஜூன் 26, 2024 அன்று பிபிபிஎல் வணிக நேரத்தின் முடிவில் இருந்து அவர் விடுவிக்கப்படுவார்." என்று பேடிஎம் பிராண்ட் உரிமையாளரான One97 கம்யூனிகேஷன்ஸ் தெரிவித்துள்ளது.

பேடிஎம் 

இந்திய ரிசர்வ் வங்கியின் தடை நடவடிக்கை

இந்திய ரிசர்வ் வங்கியின் தடை நடவடிக்கையை பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி எதிர்கொண்டுள்ள நிலையில் சாவ்லா ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் டிஜிட்டல் வாலட், டெபாசிட்கள் மற்றும் கிரெடிட் தயாரிப்புகளை நிறுத்துமாறு இந்திய ரிசர்வ் வங்கி பேடிஎம்மிடம் கேட்டுக் கொண்டது. இதனால், அந்நிறுவனம் பெரும் பின்னடைவுளை சந்தித்து வருகிறது. பேடிஎம் மற்றும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி யூனிட் ஆகியவை தங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்களையும் பரஸ்பரமாக நிறுத்த சமீபத்தில் ஒப்புக்கொண்டன. கடந்த பிப்ரவரி மாதம், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் நிறுவன தலைவர் விஜய் சேகர் ஷர்மா, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.