Loading...
நிறுவனங்களுக்கு நிம்மதி; வருடாந்திர அறிக்கை தாக்கல் காலக்கெடு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு
வருடாந்திர அறிக்கை தாக்கல் காலக்கெடு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

நிறுவனங்களுக்கு நிம்மதி; வருடாந்திர அறிக்கை தாக்கல் காலக்கெடு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 25, 2026
07:17 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம், 2025-26 ஆம் நிதி ஆண்டிற்கான நிறுவனங்களின் வருடாந்திர நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2026 டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. மேலும், நிறுவனங்களின் வருடாந்திர படிவங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 2027 ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதற்காக எவ்வித கூடுதல் அபராதக் கட்டணமும் வசூலிக்கப்படாது என அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப சிக்கல்

MCA 21 போர்ட்டலில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களுக்குத் தீர்வு

நிறுவனங்கள் தங்களின் கட்டாய சட்டப்பூர்வ தாக்கல்களை மேற்கொள்ளப் பயன்படுத்தப்படும் 'MCA 21' போர்ட்டலில் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் நிலவி வந்தன.

இதனால் நிறுவன செயலாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் குறித்த நேரத்தில் படிவங்களை சமர்ப்பிக்க முடியாமல் கடும் சிரமங்களை சந்தித்தனர்.

இந்த சிக்கல்களைக் கருத்தில் கொண்டும், பங்குதாரர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டும் கூடுதல் கட்டணமின்றி தாக்கல் செய்ய இந்த கால அவகாச நீட்டிப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.

புதிய காலக்கெடு

நீட்டிக்கப்பட்டுள்ள படிவங்கள் மற்றும் புதிய காலக்கெடு விவரங்கள்

புதிய உத்தரவின்படி, AOC-4, AOC-4 (CFS), AOC-4 (XBRL), மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கான AOC-4 படிவங்களை 2026 டிசம்பர் 31 வரை தாக்கல் செய்யலாம்.

அதேபோல, MGT-7 மற்றும் சிறிய நிறுவனங்களுக்கான MGT-7A ஆகிய வருடாந்திர அறிக்கைப் படிவங்களை 2027 ஜனவரி 31 வரை சமர்ப்பிக்கலாம்.

வழக்கமாக நிதிநிலை அறிக்கைகள் ஆண்டு பொதுக்கூட்டம் நடந்த 30 நாட்களுக்குள்ளும், வருடாந்திர அறிக்கைகள் 60 நாட்களுக்குள்ளும் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ஆண்டு பொதுக்கூட்டங்கள்

ஆண்டு பொதுக்கூட்டங்களுக்கான சட்டப்பூர்வ காலக்கெடுவில் மாற்றமில்லை

இந்த காலக்கெடு நீட்டிப்பானது வருடாந்திர அறிக்கை படிவங்களைத் தாக்கல் செய்வதற்கு மட்டுமே பொருந்தும் என்றும், நிறுவனங்கள் தங்களின் வருடாந்திரப் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான சட்டப்பூர்வ காலக்கெடுவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

உரிய காலத்திற்குள் ஆண்டு பொதுக்கூட்டங்களை நடத்த தவறிய நிறுவனங்கள் மீது நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இந்திய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.

ADVERTISEMENT