மகிழ்ச்சியான அறிவிப்பு: வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர் விலை குறைப்பு
செய்தி முன்னோட்டம்
மாதாந்திர விலை திருத்தத்தின் ஒரு பகுதியாக, வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் (எல்பிஜி) விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இந்த விலை குறைப்பு திங்கட்கிழமை (டிசம்பர் 1, 2025) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையில் ₹10 குறைக்கப்பட்டுள்ளது. விலைக் குறைப்புக்குப் பிறகு, நாட்டின் முக்கிய நகரங்களில் வணிக எல்பிஜி சிலிண்டரின் புதிய விலை விவரங்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது எல்பிஜி விலை டெல்லியில் ₹1,580.50, கொல்கத்தாவில் ₹1,684.00, மும்பையில் ₹1,531.50 மற்றும் சென்னையில் ₹1,739.50 ஆக உள்ளது.
வீடுகள்
வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டருக்கான விலையில் மாற்றமில்லை
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தொடர்ந்து இரண்டாவது மாதமாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் தங்களது செலவுகளைச் சற்றுக் குறைத்துக் கொள்ள முடியும். கடந்த மாதம் இந்தச் சிலிண்டரின் விலை ₹5 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வணிக சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்ட போதிலும், வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் பழைய விலையே நீடிக்கிறது. இதற்கிடையே, விமானப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் ஏவியேஷன் டர்பைன் எரிபொருளின் (ATF) விலை சுமார் ஒரு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.